ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 6–06–18

05 ஜூன் 2018, 03:11 PM

இந்த பாட்டை ரசிக்­க­வும் தனி திறமை வேண்­டும்!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

1) பின்­னணி பாட­கர் எஸ்.பி.பி., தன் அனு­ப­வத்தை பகிர்ந்து கொள்­கி­றார்.

நான் இளை­ய­ராஜா இசை­யில் எத்­த­னையோ பாடல்­களை பாடி­யுள்­ளேன். ஒவ்­வொரு பாடல்­க­ளை­யும் மணிக்­க­ணக்­கில் பேசிக்­கொண்டே இருக்­க­லாம். அதற்­கான நேரம் இப்­போது எனக்கு இல்லை. பட்! நான் எங்கு சென்­றா­லும் என்னை ஒரு குறிப்­பிட்ட பாட­லைத்­தான் அதி­கம் கேட்­பார்­கள். நான் பல கச்­சே­ரி­க­ளில் இந்­தப் பாடலை பாடா­மல் மேடை இறங்­கி­யதே இல்லை. அந்த பாடல்­தான் 'தள­பதி' திரைப்­ப­டத்­தில் இடம்­பெற்ற ''சுந்­தரி கண்­ணால் ஒரு சேதி...''

காவி­யக்­க­வி­ஞர் வாலி எழு­திய பாடல் காலம் உள்ள வரை இருக்­கும்.

இந்த பாடல் மும்­பை­யில் பதி­வா­கி­யது. ஆர்.டி. பர்­மன்  ஸ்டூடி­யோ­வில் அவ­ரது இசைக்­கு­ழு­வில் இருக்­கும் இசைக்­க­லை­ஞர்­கள் இந்த பாட­லுக்கு இசைக்­க­ரு­வி­கள் இசைத்­த­னர். இளை­ய­ராஜா குறிப்­பு­க­ளைக் கொடுத்­த­தும் இசைக்­கத் தொடங்­கி­னர். ஒவ்­வொரு முறை­யும் இசைத்து முடித்­த­வு­டனே எழுந்து நின்று கைதட்­டி­னர். இது கூட ஒன்­றும் வியப்­பா­னது இல்லை. பாட­லின் பதிவு முடிந்­த­வு­டன் ஒரு இசைக் கலை­ஞர் வந்து, ராஜாவை காட்டி ‘இவரை சென்­னை­யி­லேயே இருக்க சொல்­லுங்­கள். இவர் கம்­போஸ் செய்­வதை எல்­லாம் வாசிப்­பது ரொம்­ப­வும் கஷ்­டம். மும்­பைக்கு வர­வேண்­டாம் என்று சொல்­லுங்­கள்’ என்­றார்.’  

இந்த பாட்­டைக் கேட்­கும்­போ­தெல்­லாம் என் பிள்ளை ‘இங்கு ஒரே ஒரு புல்­லாங்­கு­ழல் வரு­கி­றது, கவ­னித்­துக் கேள்’, ‘இப்போ எல்லா இசை­யும் ஒண்ணா வரும் கேளு’ என்று சொல்­லிக் கொண்டே இருப்­பான். இந்­தப் பாட்டை ரசிக்­க­வும் ஒரு தனி திறமை வேண்­டும் என்று தோன்­றும் எனக்கு.

பட இயக்­கு­னர், காட்சி அமைப்­பா­ளர், நட­னம் அமைத்­த­வர், இசை­ய­மைத்­த­வர், பாடலை எழு­தி­ய­வர், பாடி­ய­வர்­கள், நடி­கர், நடிகை என்று ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­கள் பங்கை உணர்ந்து செய்­தி­ருப்­பார்­கள். தனி­யாக இருக்­கும்­போது கண்ணை மூடிக் கொண்டு முழு­மை­யாக இந்த பாட்­டில் ஒன்­றிப்­போய் கேளுங்­கள். அது ஒரு ஆனந்த அனு­ப­வ­மாக நிச்­ச­யம் இருக்­கும்!

ரஜி­னி­யும் ஷோப­னா­வும் பாடும் பாடல் இது. போர்க்­க­ளக்­காட்­சி­யாக உரு­வ­கம் செய்­தி­ருப்­பார்­கள். காத­லன் போருக்­குப் போயி­ருப்­பான். அவன் வரு­கைக்­காக காத்­தி­ருக்­கும் காதலி. பேலூர், ஹளே­பீடூ ஆகிய இடங்­க­ளில் பட­மாக்­கப்­பட்­டி­ருக்­கும் காட்சி.

என்­னு­டன் சேர்ந்து ஜான­கி­யம்­மா­வும் பாடி அந்த பாட­லுக்கு உயி­ரூட்­டி­யி­ருப்­பார்.முழு பாட­லை­யும் நீங்­க­ளும் பாடிப்­பா­ருங்­கள்.

பாடல்:

சுந்­தரி கண்­ணால் ஒரு சேதி!

சொல்­லடி இந்­நாள் நல்ல தேதி!

என்­னையே தந்­தேன் உனக்­காக!

ஜென்­மமே கொண்­டேன் அதற்­காக!

நான் உனை நீங்க மாட்­டேன்

நீங்­கி­னால் தூங்க மாட்­டேன்

சேர்ந்­ததே நம் ஜீவனே!

சுந்­தரி…

என்­னையே…

வாய் மொழிந்த வார்த்தை யாவும்

காற்­றில் போனால் நியா­யமா?

பாய் விரித்து பாவை பார்த்த

காதல் இன்­பம் மாயமா?

வாள் பிடித்து நின்­றால் கூட

நெஞ்­சில் உந்­தன் ஊர்­வ­லம்!

போர்க்­க­ளத்­தில் சாய்ந்­தால் கூட

ஜீவன் உன்னை சேர்ந்­தி­டும்

தேன் நிலவு நான் வாழ

ஏன் இந்த சோதனை?

வான் நிலவை நீ கேளு!

கூறும் என் வேதனை!

எனைத்­தான் அன்பே மறந்­தாயோ?

மறப்­பேன் என்றே நினைத்­தாயோ?

என்­னையே தந்­தேன்…

சுந்­தரி…

சோலை­யி­லும் முட்­கள் தோன்­றும்

நானும் நீயும் நீங்­கி­னால்!

பாலை­யி­லும் பூக்­கள் பூக்­கும்

நானுன் மார்­பில் தூங்­கி­னால்!

மாதங்­க­ளும் வாரம் ஆகும்

நானும் நீயும் கூடி­னால்

வாரங்­க­ளும் மாதம் ஆகும்

பாதை மாறி ஓடி­னால்

கோடி சுகம் வாராதோ?

நீ எனை தீண்­டி­னால்

காயங்­க­ளும் ஆறாதோ?

நீ எதிர் தோன்­றி­னால்

உடனே வந்­தால் உயிர் வாழும்!

வரு­வேன் அந்­நாள் வரக்­கூ­டும்!

சுந்­தரி…