ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது: பேராயர் சின்னப்பா வேண்டுகோள்

14 மார்ச் 2016, 08:59 PM

சென்னைஓட்டுக்குப் பணம் வாங்காமல் கண்ணியமான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பேராயர் சின்னப்பா வேண்டுகோள் விடுத்தார்.

கிறிஸ்தவ இளைஞர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில், சென்னை சாந் தோம் மேல்நிலைப்பள்ளி கலை யரங்கில் நடைபெற்றது.

சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் .எம்.சின்னப்பா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியது: நான் சிறுவனாக இருந்தபோது, அரசியல் கூட்டத்தில் கிறிஸ்தவர் கள் கலந்துகொண்டால் அது பாவ மாக கருதப்பட்டது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த, கையும், மனமும் கறைபடி யாதவர்களை, சிறுபான்மையின ரின் தேவைகளை உணர்ந்து செயல்படக்கூடியவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவது கேவலம். நம் பணத்தை திருடி நம்மிடமே கொடுக்கிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்து, கொள்ள வேண்டும். கண்ணியமானவர்களை தேர்ந்தெடுக்க வாக்களிக்க வேண்டும் என்று பேராயர் சின்னப்பா பேசினார்.

தமாகா துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது:

கன்னியாகுமரியை தவிர வேறு எந்த தொகுதியிலும் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக கிறிஸ்தவர்கள் இல்லை. கிறிஸ்தவம் சார்ந்த ஒரு கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட் டால் வெற்றி பெறவே முடியாது. அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் தமிழகத் தொகுதிகளில் வெற்றிபெற முடியும்.

கிறிஸ்தவ சமூகத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும். அதற்கு கிறிஸ்தவ இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் இருந்து தங்கள் அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும்.

30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசியல் சூழல் வேறு. இப் போதைய நிலை வேறு. தற்போது அடையாள அரசியல் முக்கியத்துவம் பெற்று வருகிறது என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரிச்சர்டு வில்சன், பேராசிரியர் .மார்க்சு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, ஜான்நிக்கல்சன் ஆகியோரும் உரையாற்றினர்.