'பிக் பாஸ்' ஹீரோ!

14 ஏப்ரல் 2018, 04:23 PM

'பிக் பாஸ்' நிகழ்ச்­சி­யின் மூலம் பிர­ப­ல­மா­கி­யி­ருக்­கும் ஹரிஷ் கல்­யாண் தற்­போது இளன் இயக்­கத்­தில் 'பியார் பிரேமா காதல்' படத்­தில் நடித்து வரு­கி­றார். இந்த படத்­தில் அவ­ருக்கு ஜோடி­யாக ரைசா வில்­சன் நடிக்­கி­றார். யுவன் சங்­கர் ராஜா இசை­ய­மைத்து தயா­ரிக்­கும் இந்த படத்­தின் படப்­பி­டிப்பு முடிந்­து­விட்ட நிலை­யில், பட ­அ­தி­பர்­கள் போராட்­டம் முடிந்த பிறகு வரு­கிற ஜூன் மாதம் படத்தை திரைக்கு கொண்­டு­வர படக்­குழு திட்­ட­மிட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், ஹரிஷ் கல்­யாண் அடுத்­த­தாக 'புரி­யாத புதிர்' படத்தை இயக்கிய ரஞ்­சித் ஜெயக்­கொடியின் புதிய படத்தில் நடிக்கிறார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இது­ கு­றித்து இயக்­கு­நர் ரஞ்­சித் ஜெயக்­கொடி கூறும்­போது,

''எனது அடுத்த படத்­தின் பணி­கள் விறு­வி­றுப்­பாக நடந்து வரு­கி­ன்றன. அந்த படத்­தில் ஹரிஷ் கல்­யாண் நாய­க­னாக நடிக்­கி­றார். இந்த படம் தனது முதல் படம் போல் இல்­லா­மல், முற்­றி­லும் மாறு­பட்ட திரைக்­க­தை­யில், கருத்­துள்ள ஒரு பட­மாக இருக்­கும்'' என்­றார்.

பட­ அ­தி­பர்­கள் போராட்­டம் முடிந்­த ­பி­றகு இந்த படத்­தில் நடிக்­கும் மற்ற கதா­பாத்­தி­ரங்­கள் குறித்த அறி­விப்பு பிரம்­மாண்­ட­மான முறை­யில் அறி­விக்­கப்­பட இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார்.