கர்ணன் விக்ரம்!

14 ஏப்ரல் 2018, 04:22 PM

தென்­னிந்­தி­ய திரை­யு­ல­கில் 'பாகு­பலி' படத்­தின் இரண்டு பாகங்­க­ளும் வெளி­வந்து பல கோடி ரூபாய் வசூ­லித்து சாதனை புரிந்­தன. அதன்­பின் சரித்­திர படங்­க­ளின் மீது பல­ருக்­கும் ஆசை வந்­து­விட்­டது. ஒரு மகா­பா­ர­தக் கதையை பட­மாக்க இந்தி, மலை­யா­ளம் ஆகிய மொழி­க­ளில் முயன்று வரு­கி­றார்­கள். 1000 கோடி ரூபாய் பட்­ஜெட் என அறி­வித்­தார்­கள். அதன் பின் சத்­தத்­தைக் காணோம்.

தெலுங்­கில் சிரஞ்­சீவி நடிக்க 'சைரா' படத்தை ஆரம்­பித்­துள்­ளார்­கள். அப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு ஐத­ரா­பாத்­தில் தொடர்ந்து நடை­பெற்று வரு­கி­றது. இப்­போது விக்­ரம் நடிக்­க­வுள்ள 'மகா­வீர் கர்ணா' படம் பற்றி புதிய தக­வல் வெளி­வந்­துள்­ளது. இப்­ப­டத்­தின் கதை, திரைக்­கதை உரு­வாக்­கத்தை இயக்­கு­னர் விமல் முடித்து விட்­டா­ராம். தமிழ், இந்­தி­யில் 300 கோடி ரூபாய் பட்­ஜெட்­டில் இப்­ப­டம் தயா­ராக உள்­ள­தாம். அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த நிறு­வ­னம் ஒன்று இப்­ப­டத்­தைத் தயா­ரிக்­க­வுள்­ளது. பின் தெலுங்கு, மலை­யா­ளம் ஆகிய மொழி­க­ளி­லும் படத்தை டப்­பிங் செய்து வெளி­யிட உள்­ளார்­கள்.

படத்­தின் ஸ்கிரிப்டை சமீ­பத்­தில் இயக்­கு­னர் விமல் சப­ரி­ம­லை­யில் வைத்து சிறப்பு வழி­பாடு நடத்­தி­யுள்­ளா­ராம். அக்­டோ­பர் மாதம் இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு ஆரம்­ப­மா­கும் என தெரி­கி­றது.