முத்தத்திற்கு பரிசு!

14 ஏப்ரல் 2018, 04:21 PM

ராம் சரண் தேஜா, சமந்தா நடித்த தெலுங்கு படம் ‘ரங்­கஸ்­த­லம்’. திரைக்கு வந்து ஓடிக்­கொண்­டி­ருக்­கும் இந்த படத்­துக்கு ரசி­கர்­க­ளி­டம் அமோக வர­வேற்பு கிடைத்­துள்­ளது. 10 நாட்­க­ளில் உல­க­ள­வில் சுமார் ரூ.150 கோடி வசூல் செய்­துள்­ளது.

இந்த படத்­தில் ராம் சரண் –- சமந்தா முத்­தக்­காட்சி ஒன்று இடம் பெற்­றுள்­ளது. முத்­தக்­காட்­சி­யில் நடிக்க வேண்­டும் என்று இயக்­கு­னர் சொன்­ன­தும் இரு­வ­ரும் தயங்கி உள்­ள­னர். என்­றா­லும், இதை­ய­டுத்து காட்­சி­யின் முக்­கி­யத்­து­வம் கருதி அப்­படி நடிக்க ஒப்­புக்­கொண்­டுள்­ள­னர். ராம் சரண் தேஜா­வுக்கு, சமந்தா முத்­தம் கொடுப்­பது போன்ற காட்­சியை பட­மாக்கி உள்­ள­னர். பல­முறை டேக் வாங்­கி­ய­போ­தும் யதார்த்­த­மாக அமை­ய­வில்லை. மீண்­டும் மீண்­டும் அதை பட­மாக்­கிய பிற­கும் திருப்தி ஏற்­ப­டா­த­தால், நேரம் போய்க்­கொண்டே இருந்­தது. இதை பார்த்த தயா­ரிப்­பா­ளர் இந்த காட்­சியை சீக்­கி­ரம் பட­மாக்கி முடித்­தால் உங்­க­ளுக்கு ரூ.10 லட்­சம் பரிசு என்று டைரக்­டர் சுகு­மா­ரி­டம் கூறி­யுள்­ளார். நிலை­மையை புரிந்து கொண்ட இயக்­கு­னர் சமந்­தா­வி­டம் மீண்­டும் காட்­சியை உணர்­வு­பூர்­வ­மாக விளக்க 10 விநா­டி­க­ளில், சமந்தா, ராம்­ச­ர­ணுக்கு முத்­தம் கொடுத்த காட்சி ‘ஓ.கே.’ ஆகி­யி­ருக்­கி­றது. இதற்காக தயா­ரிப்­பா­ள­ரி­டம் ரூ.10 லட்­சம் பரிசு பெற்­றதை இயக்­கு­னர் படக்­கு­ழு­வி­ன­ரி­டம் தெரி­வித்து மகிழ்ச்சி அடைந்­துள்­ளார்.