மகிமாவுக்கு மவுசு!

14 ஏப்ரல் 2018, 04:19 PM

'சாட்டை,' 'குற்­றம்- 2,' 'புரி­யாத புதிர்,' 'கொடி வீரன்' ஆகிய படங்­க­ளில் நடித்­த­வர் மகிமா நம்­பி­யார். அருள்நிதி­யின் நடிப்­பில் விரை­வில் வெளி­யா­க­வி­ருக்­கும் 'இர­வுக்கு ஆயி­ரம் கண்­கள்' படத்­தி­லும் மகிமா நம்­பி­யார் கதா­நா­ய­கி­யாக நடித்­தி­ருக்­கி­றார்.

இந்த படம் விரை­வில் வெளி­யாக இருக்­கி­றது. இந்த படங்­க­ளைத் தொடர்ந்து  'அசு­ர­குரு' என்ற படத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மாகி இருக்­கி­றார் மகிமா நம்­பி­யார். 'அசு­ர­குரு' படத்­தில் விக்­ரம் பிரபு கதா­நா­ய­க­னாக நடிக்­கி­றார். அவ­ரு­டன்  மகிமா நம்­பி­யார் முதன்முத­லாக அந்த படத்­தில் இணைய இருக்­கி­றார். ராஜ்­தீப் இந்த படத்தை இயக்­கு­கி­றார். படப்­பி­டிப்பு விரை­வில் துவங்­க­வி­ருக்­கி­றது. விக்­ரம் பிரபு நடித்­துள்ள 'பக்கா' மற்­றும் 'துப்­பாக்கி முனை­யில்' ஆகிய இரண்டு படங்­கள் அடுத்­த­டுத்து வெளி­யா­க­வி­ருக்­கின்­றன.