'காலா' ரக­சி­யம்!

13 ஏப்ரல் 2018, 02:30 PM

ரஜி­னி­யின் ‘காலா’ படம் 'யு/ஏ' சான்­றி­தழ் பெற்று திரைக்கு வர தயா­ராக இருக்­கி­றது. பா. ரஞ்­சித் இயக்­கி­யுள்ள இதில் ஹீமா குரோஷி, அஞ்­சலி பாட்­டீல் நடித்­தி­ருக்­கி­றார்.

இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்­ன­டம், மலை­யாள படங்­க­ளில் நடித்­தி­ருக்­கும் அஞ்­சலி பாட்­டீல், இந்த படத்­தில் தாராவி பகு­தி­யில் வாழும் தமிழ் பேசத்­தெ­ரிந்த மராத்தி பெண் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். டிவி பேட்டி ஒன்­றில் ‘காலா’ படம் பற்றி அஞ்­சலி பாட்­டீல் அளித்த பேட்டி....

''‘காலா’ ஒரு அர­சி­யல் படம். இந்த படத்­தில் எனது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் சாரு­மதி கெய்க்­வாட். இதில் ரஜினி சாரின் காத­லி­யாக ஹீமா குரோஷி நடித்­தி­ருக்­கி­றார். எனக்கு கதையை நகர்த்­திச் செல்­லும் முக்­கி­ய­மான கேரக்­டர். படத்­தில் அழுத்­த­மான அர­சி­யல் கருத்து உண்டு.

இதில், நான் ரஜினி சாரு­டன் சேர்ந்து நடிக்­கும் காட்­சி­க­ளும் இருக்­கின்­றன. படத்­தின் பாதி காட்­சி­களை மராட்­டிய மாநி­லத்­தி­லும், மீதியை தமிழ்­நாட்­டி­லும் எடுத்­தி­ருக்­கி­றார்­கள்.''