புதிய முயற்சி!

13 மார்ச் 2018, 03:19 PM

தமி­ழில் முன்­னணி நடி­கை­யாக வலம் வரு­ப­வர், நடிகை அமலா பால். கஷ்­டப்­ப­டும் மக்­க­ளுக்கு சேவை செய்­வ­தில் ஆர்­வம் காட்­டும் இவர், தற்­பொ­ழுது 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறு­வ­னத்தை தொடங்­கி­யுள்­ளார். இந்த நிறு­வ­னம் கண் தானம் பற்­றிய விழிப்­பு­ணர்வு மற்­றும் அதற்­கான நிதியை திரட்­டு­வது போன்ற விஷ­யங்­க­ளில் ஈடு­ப­ட­வுள்­ளது.

இது குறித்து நடிகை அமலா பால் கூறும்­போது, ''உல­கம் முழு­வ­தும் 30 மில்­லி­யன் மக்­கள் குருட்­டுத்­தன்­மை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இதில் பெரும்­பா­லா­னோர் இந்­தி­யர்­கள். மேலும் அதிர்ச்­சி­யூட்­டும் தக­வல் என்­ன­வென்­றால் இதில் 70 சத­வீ­தம் கார்­னஸ் டிரன்ஸ்­பி­ளாண்ட் மற்­றும் கண்­புரை போன்­றவை அறுவை சிகிச்­சை­க­ளால் குணப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டி­யவை. இதற்கு பெரும் தடை­யாக இருக்­கும் முக்­கி­ய­மான விஷ­யம், போதிய கண் தானம் இல்­லா­த­து­தான். தற்­பொ­ழு­துள்ள நிலை­யில் வரு­டத்­திற்கு வெறும் 40 ஆயி­ரம் கண் சிகிச்­சை­கள் மட்­டுமே பண்­ணக்­கூ­டிய அள­வில் கண் தானம் நடக்­கின்­றது.

நான் எனது கண்­களை தானம் செய்­வது மட்­டு­மில்­லா­மல், இந்த கண் தான பற்­றாக்­கு­றையை நீக்க, இந்த அறுவை சிகிச்­சை­க­ளுக்கு நிதி திரட்ட 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறு­வ­னத்தை தொடங்­கி­யு­முள்­ளேன். நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்­தால் அனை­வ­ருக்­கும் கண் பார்வை கிடைக்­கும்­படி செய்து நமது அழ­கான, மிக வேக­மாக வளர்ந்து வரும் நமது தேசத்­தை­யும் அவர்­க­ளை­யும் காண வைக்­க­லாம்'' என்­றார்.