ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 14–02–18

13 பிப்ரவரி 2018, 03:12 PM

ராகங்களும் பாடல்களும்!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

6. சுப பந்­து­வ­ராளி

இந்த ராகத்­தில் 'பய­ணங்­கள் முடி­வ­தில்லை'யில் வரும் இந்த சோகப்­பா­டல் எனக்­குப் பிடித்­த­மான பாடல். அதி­க­பட்ச துன்­பத்­தில் உழ­லு­ப­வ­னின் மன­நி­லையை எளி­தா­கக் கொண்டு வரும் அபா­ர­மான மெட்டு, இசை, பாலு­வின் குரல். குரல் நடுங்­கு­வ­தைக் கூட அழ­கா­கச் செய்­தி­ருப்­பார் பாலு.

"நினை­வு­கள் எங்கோ அலை­கி­றதே

கன­வு­கள் ஏனோ கலை­கி­றதே"

என்ற வரி­களை அவர் எப்­ப­டிப் பாடு­கி­றார் கேளுங்­கள். அரைக் கண்­ணில் மயங்­கி­யி­ருப்­ப­னின் உணர்­வு­களை அப்­ப­டியே குர­லில் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்.

வைக­றை­யில் வைகைக் கரை­யில்

வந்­தால் வரு­வேன் உன்­ன­ரு­கில்

உன் நினை­வில் நெஞ்­சம் வான்­வெ­ளி­யில்

நாளும் நடத்­தும் ஊர்­வ­லங்­கள்

வைக­றை­யில் வைகைக் கரை­யில்

வந்­தால் வரு­வேன் உன்­ன­ரு­கில்

உன் நினைவே எனக்­கோர் சுருதி

உன் கனவே எனக்­கோர் கிருதி

உன் உணர்­வில் மனமே உருகி

வாடு­தம்மா மலர்­போல் கருகி

பலப்­பல ஜென்­மம் நானெ­டுப்­பேன்

பாடல்­கள் கோடி நான் படிப்­பேன்

அன்பே உனக்கே காத்­தி­ருப்­பேன்

ஆஆ­ஆ­ஆ­ஆ­ஆ­ஆஆ

வைக­றை­யில் வைகைக் கரை­யில்

வந்­தால் வரு­வேன் உன்­ன­ரு­கில்

ஆயி­ர­மா­யி­ரம் ஆசை­களை

ஆசை­யில் உன்­னி­டம் பேச வந்­தேன்

ஆவி­யில் மேவிய சேதி­களை

கேளென நெஞ்­சி­டம் கூற வந்­தேன்

நினை­வு­கள் எங்கோ அலை­கி­றதே

கன­வு­கள் ஏனோ கலை­கி­றதே

நிழல் போல் உன்­னைத் தொடர்­கி­றதே ஆஆ­ஆ­ஆ­ஆ­ஆ­ஆஆ

வைக­றை­யில் வைகைக் கரை­யில்

வந்­தால் வரு­வேன் உன்­ன­ரு­கில்

உன் நினை­வில் நெஞ்­சம் வான்­வெ­ளி­யில்

நாளும் நடத்­தும் ஊர்­வ­லங்­கள்

வைக­றை­யில் வைகைக் கரை­யில்

வந்­தால் வரு­வேன் உன்­ன­ரு­கில்”...

மோகன் – நதியா நடித்­தி­ருந்த 'பாடு நிலாவே' மிகப்­பெ­ரிய வெற்றி படம். இதில் இடம்­பெற்ற “வா வெளியே”.. என்ற பாடல் சுப பந்­து­வ­ராளி ராகத்­தில் அமைக்­கப்­பட்­டது.  இதனை எஸ்.பி.பியும், சித்­ரா­வும் பாடி­யி­ருப்­பார்­கள்.

இந்த ராகத்­தில் இடம்­பெற்ற இன்­னொரு அற்­பு­த­மான பாடல் “அலை­க­ளில் மிதக்­கிற”… எனத் தொடங்­கும் இப்­பா­டல் மேஜர் சுந்­தர்­ரா­ஜன் இயக்­கத்­தில் கமல்­ஹா­சன் – ஊர்­வசி நடித்­தி­ருந்த “அந்த ஒரு நிமி­டம்” படத்­தில் இடம்­பெற்­றி­ருந்­தது. அந்த இனி­மை­யான பாடலை எஸ்.பி.பியும், எஸ்.ஜான­கி­யும் இணைந்து பாடி­யி­ருப்­பார்­கள்.வாய்ப்­பி­ருந்­தால் கேட்டு பாருங்­கள்.

'தீர்த்­தக்­க­ரை­யி­னிலே' படத்­தில் இடம்­பெற்­றி­ருந்த ''தீர்த்­தக்­கரை ஓரத்­திலே...'' பாட­லும், சுப பந்­து­வ­ராளி ராகத்­தில் இடம்­பெற்­ற­து­தான்.