ஏரல் புதிய தாலுகா: துாத்­துக்­குடியில் முதல்­வர் அறி­விப்பு

23 நவம்பர் 2017, 07:58 AM


துாத்­துக்­குடி:

துாத்­துக்­கு­டி­யில் நேற்று நடந்த எம்­ஜி­ஆர் நுாற்­றாண்­டு­வி­ழா­வில் தமி­ழக முதல்­வர்  எடப்­பாடி  பழ­னி­சாமி துாத்­தக்­குடி மாவட்­டத்­திற்கு பல புதிய திட்­டங்­களை அறி­வித்­தார். இதில் ஏரல் சுற்­று­வட்­டார மக்­க­ளின்­நீண்ட நாள் கோரிக்­கை­யான ஏரல் புதிய தாலு­கா­வாக தோற்­று­விக்­கப்­ப­டும் என்று அறி­வித்­தார்.

துாத்­துக்­கு­டி­யில் நேற்று எம்­ஜி­ஆர் நுாற்­றாண்டு விழா கோலா­க­ல­மாக நடந்­தது. முதல்­வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி, துணை­மு­தல்­வர் பன்­னீர்­செல்­வம்,  அமைச்­சர் கடம்­பூர் ராஜூ உட்­பட பல அனைத்து அமைச்­சர்­க­ளும் கலந்­து­கொண்­ட­னர். விழா­வில் பல ஆயி­ரம் பேருக்கு நலத்­திட்ட உத­வி­களை வழங்கி எடப்­பாடி பழ­னிச்­சாமி பேசி­னார். அப்­போது துாத்­துக்­குடி மாவட்­டத்­திற்கு 34 புதிய திட்­டங்­களை அறி­வித்­தார். இதில் முக்­கிய அறி­விப்­பாக ஏரல் நகர மக்­க­ளின் புதிய தாலுகா திட்­டம் நிறை­வே­றி­யுள்­ளது. நேற்று முதல்­வர் அறி­வித்த புதிய திட்­டங்­கள் வரு­மாறு.

•       ஏலை   தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு ஒரு புதிய வரு­வாய் வட்­டம் தோற்­று­விக்­கப்­ப­டும்.

•       ஏரல் அரசு ஆஸ்­பத்­தி­ரில் நவீன கண் பரி­சோ­தனை மற்­றும் சிகிச்சை மையம் அமைக்­கப்­ப­டும்.

•       கயத்­தாறு ஊராட்சி ஒன்­றி­யத்­தில், பெரி­ய­சா­மி­பு­ரம் மற்­றும் அகி­லாண்­ட­பு­ரம் ஆகிய இடங்­க­ளில் புதிய கால்­நடை கிளை நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­டும்.

•       அரசு மற்­றும் தனி­யார் பங்­க­ளிப்பு முறை­யில் துாத்­துக்­குடி வ.உ.சி. சந்­தை­யினை நவீ­னப்­ப­டுத்தி, வாக­னங்­கள் நிறுத்­தும் வச­தி­யு­டன், புதிய வணிக வளா­கம் கட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டும்.

•       துாத்­துக்­குடி  அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் இந்­திய மருத்­து­வக் கழ­கம் உரிய அனு­மதி வழங்­கி­ய­தும், மருத்­து­வப்  பட்ட மேற்­ப­டிப்­பு­கள் துவக்­கப்­ப­டும்.

பல ஆண்­டு­க­ளாக ஏரல் தனித்­தா­லு­கா­வாக அறி­விக்­கப்­ப­ட­வேண்­டும் என்று அப்­ப­குதி மக்­கள் கோரிக்கை விடுத்து வந்த நிலை­யில் முதல்­வ­ரின் அறி­விப்பு ஏரல் சுற்­று­வட்­டார மக்­கள், மற்­றும் வியா­பா­ரி­கள் மத்­தி­யில் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 7 புதிய தடுப்­ப­ணை­கள்

 துாத்­துக்­குடி மாவட்­டத்­தில் நிலத்­தடி நீரா­தா­ரத்தை பெருக்­க­வும், விவ­சா­யத்­திற்­கா­க­வும் 7 புதிய தடுப்­ப­ணை­கள் கட்­டப்­ப­டும் என்று முதல்­வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி அறி­வித்­தார்.

துாத்துக்­கு­டி­யில் நேற்று எம்­ஜி­ஆர் நுாற்­றாண்டு விழா   நடந்­தது. விழா­வில் துாத்­துக்­குடி மாவட்­டத்­தில் தொகு­தி­வா­ரி­யாக பல்­வேறு புதிய திட்­டங்­களை முதல்­வர் அறி­வித்­தார். மருத்­து­வம், விவ­சா­யம்,  உள்­ளிட்ட பல்­வேறு புதிய திட்­டங்­கள் அதில் இடம்­பெற்­றி­ருந்­தது. இதில் துாத்­துக்­குடி மாவட்­டத்­தில் நிலத்­தடி நீரா­தா­ரத்தை பெருக்­க­வும், குடி­தண்­ணீர் மற்­றும் விவ­சா­யத்­திற்­காக வைப்­பாறு, கரு­மேனி, தாமி­ர­ப­ரணி ஆறு­க­ளில் புதி­தாக 7 தடுப்­ப­ணை­கள் கட்­டப்­ப­டும் என்று அறி­வித்­தார். அதன்­படி முதல்­வர் அறி­வித்த புதிய தடுப்­ப­ணை­கள் விப­ரம் வரு­மாறு.

•       விளாத்­தி­கு­ளம் வட்­டம், பெரி­ய­சா­மி­பு­ரம் கிரா­மம் மற்­றும் வேம்­பார் கிரா­மத்­தில் வேம்­பாற்­றின் குறுக்கே இரண்டு தடுப்­ப­ணை­கள் கட்­டப்­ப­டும்.

•       ஸ்ரீவை­குண்­டம் வட்­டம், அக­ரம் குடி­யி­ருப்பு அருகே வல்­ல­நாடு கிரா­மத்­தில் தாமி­ர­ப­ரணி ஆற்­றின் குறுக்கே ஒரு தடுப்­பணை கட்­டப்­ப­டும்.

•       சாத்­தான்­கு­ளம் வட்­டம், பள்­ளக்­கு­றிச்சி கிரா­மத்­தில் கரு­மேனி ஆற்­றின் குறுக்கே ஒரு தடுப்­பணை கட்­டப்­ப­டும்.

•       கோவில்­பட்டி வட்­டம், ஆவு­டை­யம்­மாள்­பு­ரம் கிரா­மத்­தில் உப்­போ­டை­யின் குறுக்கே ஒரு சிறிய தடுப்­பணை கட்­டப்­ப­டும்.

•       கோவில்­பட்டி வட்­டம், சிதம்­ப­ரம்­பட்டி கிரா­மத்­தில் உப்­போ­டை­யின் குறுக்கே ஒரு தடுப்­பணை கட்­டப்­ப­டும்.

•       கோவில்­பட்டி வட்­டம், சவ­லப்­பேரி கிரா­மத்­தில் உப்­போ­டை­யின் குறுக்கே ஒரு தடுப்­பணை கட்­டப்­ப­டும்.

மணப்­பாடு சுற்­று­லா­த­லம் மேம்­ப­டுத்­த­ப­டும்

மணப்­பாடு சுற்­று­லா­த­லமாக மேம்­ப­டுத்­த­ப­டுத்­தப்­பட்டு அங்கு பல்­வேறு மேம்­பாட்டு பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் என்­று முதல்­வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி தெரி­வித்­தார்.

துாத்­துக்கு­டி­யில் நடந்த எம்­ஜி­ஆர் நுாற்­றாண்டு விழா­வில் திருச்­செந்­துார் தொகு­தி­யி­லும் விளாத்­தி­கு­ளம் தொகு­தி­யி­லும் பல்­வேறு புதிய திட்­டங்­கள் அறி­வித்­தார். முதல்­வர் அறி­வித்த புதிய திட்­டங்­கள் வரு­மாறு.

திருச்­செந்­துா­ரில்   சிவந்தி  ஆதித்தனா­ருக்கு மணி­மண்­ட­பம் கட்­டப்­ப­டும்.  இதற்­கான பணி 2018--–19ம் ஆண்டு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டும்.

மணப்­பாடு கடற்­க­ரைப் பகு­தி­யில் சாலை மேம்­பாட்­டுப் பணி­கள், குடி­நீர் வசதி, கழி­வறை வச­தி­கள், வாகன நிறுத்­து­மி­டம், கண்­கா­ணிப்பு கேமரா, வழி­காட்­டிப் பல­கை­கள், மீட்­புப் பட­கு­கள், கடற்­க­ரை­யைத் துாய்­மைப்­ப­டுத்­தும் சாத­னங்­கள் வழங்கி அப்­ப­குதி சுற்­று­லாத் தல­மாக தரம் உயர்த்­தப்­ப­டும்.

திருச்­செந்­துார் சமு­தாய சுகா­தார மையத்­தில் கூடு­தல் உட்­கட்­ட­மைப்பு வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டும்.

கருங்­கு­ளம் மற்­றும் ஓட்­டப்­பி­டா­ரம் வட்­டா­ரங்­க­ளில் விரி­வான ஆரம்ப நல்­வாழ்வு சேவை­கள் வழங்­கப்­ப­டும்.

விளாத்­தி­கு­ளம் தாலுகா, சிவ­ஞா­ன­பு­ரம் கிரா­மத்­தி­லும், கயத்­தார் ஊராட்சி ஒன்­றி­யம், வான­ர­முட்டி கிரா­மத்­தி­லும் ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­டும்.

துாத்­துக்­குடி அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னைக்கு அதி­ந­வீன உப­க­ர­ணங்­கள் வழங்­கப்­ப­டும். மூப்­பி­யல் பிரிவு மற்­றும் நுரை­யீ­ரல் நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உயர்­தர மருத்­துவ சிகிச்சை வழங்­கு­வ­தற்­கான வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டும்.

கோவில்­பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்­து­வ­ம­னைக்கு டயா­லி­சிஸ் கரு­வி­கள், எண்­டோஸ்­கோப் ஆய்­வக உப­க­ர­ணங்­கள் வழங்­கப்­ப­டும்.