நாயகி ஆகிறார்!

15 நவம்பர் 2017, 12:36 AM

மது­ரையை சொந்த ஊரா­கக் கொண்ட சர்­மா­வின் மக­ளான அடா சர்மா, சிம்பு, நயன்­தாரா நடித்த 'இது நம்ம ஆளு' படத்­தில் ஒரே ஒரு பாட­லுக்கு நட­ன­மா­டி­னார். அதற்கு முன், இந்தி, தெலுங்கு, கன்­ன­டப் படங்­க­ளில் நடித்த அடா­வுக்கு தமிழ் சினிமா அறி­மு­கம் சொல்­லிக் கொள்­ளும்­படி அமை­ய­வில்லை. இப்­போது 'சார்லி சாப்­ளின் 2' படம் மூலம் நாய­கி­யாக அறி­மு­க­மாக உள்­ளார் அடா.

ஷக்தி சிதம்­ப­ரம் இயக்க உள்ள இந்த படத்­தில் பிர­பு­தேவா கதா­நா­ய­க­னாக நடிக்­கி­றார். நாய­கி­க­ளாக நிக்கி கல்­ரானி, அடா சர்மா நடிக்க உள்­ளார்­கள். இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு சமீ­பத்­தில் கோவா­வில் ஆரம்­ப­மா­னது.

2002ம் ஆண்டு வெளி­வந்த 'சார்லி சாப்­ளின்' படத்­தில் பிர­பு­தேவா நாய­க­னாக நடித்­தி­ருந்­தார். 'பிக் பாஸ்' புகழ் காயத்ரி ரகு­ராம் இப்­ப­டத்­தில்­தான் நாய­கி­யாக அறி­மு­க­மா­னார். இப்­ப­டம் முதன்­மு­த­லில் இந்­தி­யா­வில் ஆறு மொழி­க­ளில் ரீமேக் செய்­யப்­பட்ட படம் என்ற பெரு­மையை பெற்­றது. இந்தி, தெலுங்கு, கன்­ன­டம், மலை­யா­ளம், மராத்தி, பெங்­காலி  ஆகிய மொழி­க­ளில் ரீமேக் செய்­யப்­பட்­டது. 15 வரு­டங்­கள் கழித்து இப்­ப­டத்­தின் இரண்­டாம் பாகத்தை இப்­போது ஆரம்­பித்­துள்­ளார்­கள். அடா சர்­மா­வுக்கு இந்த பட­மா­வது நல்ல அறி­மு­கத்­தைக் கொடுக்­கட்­டும்.