மீண்டும் சாயிஷா!

15 நவம்பர் 2017, 12:35 AM

ஏ.எல். விஜய் இயக்­கத்­தில் 'ஜெயம்' ரவி நடித்த படம் 'வன­ம­கன்.' இந்த படத்­தில் நாய­கி­யாக அறி­மு­க­மா­ன­வர் இந்தி நடிகை சாயிஷா. அதன்­பி­றகு பிர­பு­தேவா இயக்­கத்­தில் விஷால், -கார்த்தி இணைந்து நடிக்­க­வி­ருந்த 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்­தில் கமிட்­டா­கி­யி­ருந்­தார் சாயிஷா. ஆனால், அந்த படம் கைவி­டப்­பட்­டுள்­ள­தாக தக­வல். இந்­நி­லை­யில், கோகுல் இயக்­கத்­தில் விஜய் சேது­பதி நடித்து வரும் 'ஜுங்கா' படத்­தில் சாயிஷா நடிப்­ப­தாக கூறப்­பட்­டது. அதன்­பி­றகு அந்த படத்­தில் 'மேயாத மான்' ப்ரியா பவானி சங்­கர் நடிப்­ப­தாக இன்­னொரு செய்தி வெளி­யா­னது.

தற்­போது 'பசங்க' பாண்­டி­ராஜ் இயக்­கத்­தில் கார்த்தி நடிக்­க­வி­ருக்­கும் படத்­தில் சாயிஷா நடிக்­கி­றார். ஆக, 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா'வில் கார்த்­தி­யு­டன் டூயட் பாட­வி­ருந்த சாயிஷா. அது நடை­பெ­றாத நிலை­யில், இப்­போது பாண்­டி­ராஜ் படத்­தில் கார்த்­தி­யு­டன் இணை­கி­றார்.