அழிக்க நினைச்சா ரெண்டா வருவேன்!

13 அக்டோபர் 2017, 01:09 AM

‘மெர்­சல்’ படத்­தில் மேஜிக்­மேன் விஜய் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­களை பார்த்த பிறகு அந்த காட்­சி­க­ளின் பின்­னணி இசைக்­காக புதிய குறும்பாடல் ஒன்றை படத்­தில் சேர்க்­க­வி­ருப்­ப­தாக இசை­ய­மைப்­பா­ளர் ஏ.ஆர். ரஹ்­மா­னும், பாட­லா­சி­ரி­யர் விவேக்­கும் முடிவு செய்­தி­ருப்­ப­தாக கடந்த வாரம் அறி­விக்­கப்­பட்­டது. அந்த பாடல் எழு­தப்­பட்டு, அத­னு­டைய ரிக்­கார்­டிங்­கும் ஏற்­க­னவே முடி­வ­டைந்து விட்­டது. ‘மெர்­சல்’ தலைப்பு வழக்­கின் மீதான தீர்ப்பு ஸ்ரீ தேனாண்­டாள் பிலிம்ஸ் நிறு­வ­னத்­திற்கு சாத­க­மாக வந்­த­தை­ய­டுத்து, அந்த வெற்­றியை குறிக்­கும் பொருட்டு மேற்­படி பாட­லில் இடம்­பெற்ற வரி­களை இரண்­டினை டுவிட்­ட­ரில் பதி­வேற்­றி­யுள்­ளார் பாட­லா­சி­ரி­யர் விவேக்.

‘‘தடை­யின் தட­யம் உடைய உருக..

அழிக்க நெனச்சா, ரெண்டா வரு­வானே.’’ இது­தான் அந்த பாடல் வரி­கள். வரி­க­ளுக்­குள் இருக்­கும் அர்த்­தத்­தைப் புரிந்து கொண்ட விஜய் ரசி­கர்­கள் பல­ரும், படத்­தில் மூன்று விஜய் இருப்­ப­தாக கருதி வரு­கி­றார்­கள். இதற்­கான விடை வரும் 18ம் தேதி தெரிந்­து­வி­டும்.