20 கோடியில் சொந்த படம்!

12 செப்டம்பர் 2017, 10:59 PM

'கவண்,' 'விக்­ரம் வேதா,' 'புரி­யாத புதிர்' என அடுத்­த­டுத்து இந்த வரு­டத்­தில் மட்­டுமே மூன்று படங்­களை ரிலீஸ் செய்­தி­ருக்­கும் விஜய் சேது­பதி, அடுத்­த­தாக ‘கருப்­பன்’ வெளி­யீட்­டிற்­காக காத்­துக் கொண்­டி­ருக்­கி­றார். இது இல்­லா­மல் அரை டஜன் படங்­க­ளி­லும் தற்­போது நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். அதில் ஒன்று, ‘காஷ்­மோரா’ கோகுல் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'ஜுங்கா.' விஜய் சேது­ப­தி­யின் கேரி­ய­ரில் மிகப் பிரம்­மாண்­ட­மாக தயா­ரா­கும் இப்­ப­டம் குறித்து இயக்­கு­னர் கோகுல் கூறி­யி­ருப்­ப­தா­வது...

‘‘'இதற்­கு­தானே ஆசைப்­பட்­டாய் பால­கு­மாரா'விற்கு பிறகு மீண்­டும் ஒரு படத்­தில் இணைந்து பணி­யாற்­று­வோம் என்று விஜய் சேது­பதி என்­னி­டம் கூறி­யி­ருந்­தார். நான் அப்­போது பொருத்­த­மான கதை உரு­வா­ன­வு­டன் நானே வரு­கி­றேன் என்று சொல்­லி­யி­ருந்­தேன். அவ­ருக்கு ஏற்ற வகை­யில் ‘ஜுங்கா’ கதை தயா­ரா­ன­தும், அவரை சந்­தித்து கதையை சொல்­லத் தொடங்­கி­னேன். கதையை முழு­வ­தும் கேட்­டு­விட்டு, சிறிது நேர மவு­னத்­திற்கு பிறகு, இந்த கதையை நானே தயா­ரிக்­கி­றேன் என்று சொன்­னார். ரொம்ப சந்­தோ­ஷப்­பட்­டேன். ஏனெ­னில், படத்­தின் பட்­ஜெட் தோரா­ய­மாக இரு­பது கோடியை தாண்­டும். அவர் இது­வரை நடித்த படங்­க­ளி­லேயே இது­தான் பிரம்­மாண்­ட­மான பட்­ஜெட்­டில் தயா­ரா­க­வி­ருக்­கும் படம். அத­னால் வேறு தயா­ரிப்­பா­ள­ரைக் காட்­டி­லும் நாமே தயா­ரிப்­ப­து­தான் பொருத்­த­மா­னது என்று கூறி அவரே தயா­ரிக்­கி­றார்.

அறு­பது சத­வீத படம் பிரான்­சி­லும், மீத­முள்ள படம் சென்னை, துாத்­துக்­குடி, ராம­நா­த­பு­ரம் ஆகிய பகு­தி­க­ளி­லும் பட­மாக்­கத் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றோம். படத்­தில் விஜய் சேது­ப­திக்கு ஜோடி­யாக நடிகை சயீஷா ஒப்­பந்­த­மா­கி­யி­ருக்­கி­றார். அத்­து­டன் முக்­கி­ய­மான கேரக்­ட­ரில் யோகி பாபு­வும் நடிக்­கி­றார். ‘ஆண்­ட­வன் கட்­டளை’ படத்­திற்கு பிறகு யோகி பாபு, இந்த படத்­தில் விஜய் சேது­ப­தி­யு­டன் படம் முழு­வ­தும் வரும் வகை­யில் முக்­கி­ய­மான கேரக்­ட­ரில் நடிக்­கி­றார். ஏனைய தொழில்­நுட்ப கலை­ஞர்­க­ளைப் பொறுத்­த­வரை முன்­னணி கலை­ஞர்­கள் பல­ரும் பணி­யாற்­ற­வி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடை­பெற்று வரு­கி­றது. இறு­தி­யா­ன­வு­டன் தெரி­விக்­கி­றேன்'' என்­றார்.