நன்றி கூட்டம்!

12 செப்டம்பர் 2017, 10:56 PM

அறி­முக இயக்­கு­னர் நித்­தி­லன் இயக்­கத்­தில் கடந்த வாரம் வெளி­யான படம் ‘குரங்கு பொம்மை.’ பார­தி­ராஜா, விதார்த், டெல்னா டேவிஸ், பி.எல். தேனப்­பன் முத­லா­னோர் நடிப்­பில் வெளி­யா­ன இப்­ப­டம் பத்­தி­ரி­கை­யா­ளர் மத்­தி­யி­லும் நல்ல வர­வேற்பை பெற்று படத்­திற்கு நல்ல விமர்­ச­னங்­க­ளும் கிடைத்து வெற்­றிப்­ப­ட­மாக அமைந்­துள்­ளது. இந்­நி­லை­யில் இந்த படத்­தின் வெற்­றி­யில் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்­கும் பெரும் பங்கு இருக்­கி­றது என்ற வகை­யில் இப்­ப­டக் குழு­வி­னர் பத்­தி­ரி­கை­யா­ளர்­களை சந்­தித்து நன்றி தெரி­வித்­த­னர். அப்­போது இயக்­கு­னர் பார­தி­ராஜா பேசும்­போது,

‘‘நான் எத்­த­னையோ படங்­களை இயக்­கி­யி­ருக்­கி­றேன். எனது முதல் பட­மான '16 வய­தி­னிலே' படத்­தின் மூலமே என்னை பெரிய இடத்­துக்கு கொண்டு சேர்த்­த­வர்­கள் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள்! அந்த படத்­தைப் போல பல வெற்­றிப் படங்­களை கொடுத்­தி­ருக்­கி­றேன். அந்த படங்­க­ளின் வெற்­றி­யில் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்­கும் பங்கு இருந்­தி­ருக்­கி­றது. ஆனால் இது­வ­ரை­யி­லும் நான் ஒரு படம் வெற்றி பெற்­ற­தற்­காக பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்­காக இப்­படி ஒரு கூட்­டத்தை கூட்டி நன்றி தெரி­வித்­த­தில்லை. நான் சம்­பந்­தப்­பட்ட ஒரு படத்­தின் வெற்­றி­யில் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கும் வித­மாக நடக்­கும் ஒரு விழா­வில் கலந்­து­கொள்­வது இது­தான் முதல் முறை! இந்த செயல் பாராட்­டுக்­கு­ரி­யது. இது தொடர வேண்­டும்'' என்­றார்.