கதா­நா­யகி புரொ­மோ­ஷன்!

12 செப்டம்பர் 2017, 10:52 PM

ராம் இயக்­கிய முதல் பட­மான 'கற்­றது தமிழ்' படத்­தில் ஆனந்தி என்ற கேரக்­ட­ரில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்­த­வர், வெண்பா. முதல் படத்­தில் சிறப்­பாக நடித்­த­வர் அதன்­பின்­னர் சில படங்­க­ளில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக தொடர்ந்­தார். இப்­போது 'காதல் கசக்­கு­தய்யா' என்ற படத்­தில் நாய­கி­யாக நடித்­தி­ருக்­கி­றார் அவர். இந்த படத்­தில் பள்ளி மாண­வி­யாக, துரு­வாவை காத­லிக்­கும் வேடத்­தில் நடித்­தி­ருக்­கி­றார் வெண்பா. இதை­ய­டுத்து இசை­ய­மைப்­பா­ளர் சிற்­பி­யின் மகன் நந்­தன் ராம் நாய­க­னாக நடித்து வரும் 'பள்ளி பரு­வத்­திலே' என்ற படத்­தி­லும் நாய­கி­யாக நடித்­தி­ருக்­கி­றார்  வெண்பா. இந்த படங்­க­ளைத் தொடர்ந்து ''என் திற­மைக்கு சவால் விடக்­கூ­டிய அழுத்­த­மான கதா­நா­யகி வேடங்­க­ளாக தேர்ந்­தெ­டுத்து நடிப்­பேன்'' என்று கூறும் வெண்பா, ''இந்த படங்­களை பார்த்து விட்டு  நல்ல கதை­க­ளு­டன் இயக்­கு­னர்­கள் என்னை அணு­கு­வார்­கள் என்ற நம்­பிக்கை உள்­ளது'' என்­கி­றார்.