டிசம்­ப­ருக்கு போன சிவா படம்!

12 செப்டம்பர் 2017, 10:17 PM

மோகன் ராஜா இயக்­கத்­தில் சிவ­கார்த்­தி­கே­யன், நயன்­தாரா நடிப்­பில் உரு­வாகி இருக்­கும் படம் ‘வேலைக்­கா­ரன்’. இப்­ப­டம் செப்­டம்­பர் 29ம் தேதி வெளி­யா­கும் என படக்­கு­ழு­வி­னர் அதி­கா­ரப்­பூர்­வ­மாக அறி­வித்­த­னர். ஆனால், அந்த தேதி­யில் படம் வெளி­யாக வாய்ப்­பில்லை என்று தக­வல்­கள் வெளி­யா­கின.

இந்­நி­லை­யில், செப்­டம்­பர் 29-ம் தேதி 'வேலைக்­கா­ரன்' வெளி­யா­கா­த­தற்­கான கார­ணத்தை படக்­குழு முதன்­மு­றை­யாக தெரி­வித்­துள்­ளது. இது குறித்து படக்­குழு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் கூறி­யி­ருப்­ப­தா­வது: '''வேலைக்­கா­ரன்' படத்­தின் இறு­திக்­கட்ட பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இன்­னும் 2 பாடல்­கள் பட­மாக்­கப்­பட உள்­ளன. 'தனி ஒரு­வன்' வெற்­றிக்­குப் பிறகு மோகன் ராஜா இயக்­கத்­தில் வெளி­யா­க­வுள்ள பட­மென்­ப­தால், அனைத்து தரப்­பி­லும் தர­மாக இருக்க வேண்­டும் என முடிவு செய்­துள்­ளோம். மேலும், புதிய முறை­யில் தணிக்கை பணி­க­ளும் முடி­வ­டைய 3-4 வாரங்­கள் ஆகின்­றன.

ஆகை­யால் செப்­டம்­பர் 29-ம் தேதி எங்­க­ளு­டைய படம் வெளி­யா­காது. இதற்­காக அனை­வ­ரி­ட­மும் வருத்­தம் தெரி­விக்­கி­றோம். பெரிய முத­லீட்டு படம் என்­ப­தால் ஏதா­வது ஒரு கொண்­டாட்ட காலத்­தில் வெளி­யிட்­டால் மட்­டுமே சரி­யாக இருக்­கும். அக்­டோ­ப­ரில் பல்­வேறு படங்­கள் வெளி­யா­க­வுள்­ளது. நவம்­ப­ரில் எந்­த­வொரு விழாக் கொண்­டாட்­ட­மும் இல்லை. ஆகை­யால் டிசம்­பர் வெளி­யீடு மட்­டுமே சரி­யாக இருக்­கும் என தேர்வு செய்­துள்­ளோம். கிறிஸ்­து­மஸ் தின விடு­மு­றையே சரி என்று விநி­யோ­கஸ்­தர்­க­ளும் தெரி­வித்­த­தால், டிசம்­பர் 22-ம் தேதி வெளி­யிட முடிவு செய்­தி­ருக்­கி­றோம்.

ரசி­கர்­கள் மற்­றும் மக்­கள் ஆகி­யோ­ரி­ட­மும் நீண்ட கால காத்­தி­ருப்­புக்கு வருத்­தம் தெரி­வித்­துக் கொள்­கி­றோம். ஆனால், இந்த காத்­தி­ருப்­புக்கு ஒரு சிறப்­பான படத்­தைக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள் என்­பதை படம் பார்க்­கும் போது உணர்­வீர்­கள்.''