பிரம்மாண்ட நாயகன்!

13 ஆகஸ்ட் 2017, 01:47 AMபிரம்­மாண்­ட­மாக தயா­ரிக்­கப்­பட்டு நாகார்­ஜுன்,  அனுஷ்கா,  பிரக்­யா­ஜெய்ஸ்­வால், ஜெக­ப­தி­பாபு, சாய்குமார், சம்­பத், பிரம்­மா­னந்­தம் இவர்­க­ளின் நடிப்­பில் வெளி­வர இருக்­கிற படம்  'அகி­லாண்­ட­கோடி பிரம்­மாண்ட நாய­கன்.' ராமா என்ற வெங்­க­டச பெரு­மா­ளின் பக்­த­னின் உண்­மை சம்­ப­வத்தை  மைய­மாக கொண்­ட­தாம்.

இப்­ப­டத்தை தெலுங்கு உட்­பட பிற­மொ­ழி­க­ளை­யும் சேர்த்து சுமார் 60 படங்­களை இயக்­கி­யுள்ள கே. ராக­வேந்­தி­ர­ராவ் இயக்­கி­யுள்­ளார். இவ­ரி­டம் உத­வி­யா­ள­ராக இருந்­த­வர்­தான் 'பாகு­பலி' புகழ் எஸ்.எஸ். ராஜ­ம­வுலி.

பெரு­மா­ளின் பக்­தை­யான ஆண்­டா­ளின் கதா­பாத்­தி­ரத்தை மைய­

மாக வைத்து அனுஷ்கா கதா­பாத்­தி­ரத்தை உரு­வாக்கி கதா­நா­ய­கி­யாக நடிக்க வைத்­துள்­ள­னர். 'மகா­பா­ரத' கிருஷ்­ண­ராக நடித்து புகழ்­பெற்ற சவு­ரப் ஜெ­யின் வெங்­க­டேச பெரு­மாள் வேடம் ஏற்று சிறப்­பாக நடித்­துள்­ளார்.

'பாகு­பலி'க்கு இசை­ய­மைத்து புகழ்­பெற்ற கீர­வாணி இப்­ப­டத்­தின் கதை­யின் தேவைக்­கேற்ப 12 பாடல்­களை சிறப்­பாக இசை­ய­மைத்­துள்­ளார்.

பக­வா­னுக்­கும் பக்­த­னுக்­கும் உள்ள உறவு, திரு­மலை உரு­வான விதம், ஆனந்த நிலை­யம் என பெயர் வரக்­கா­ர­ணம்,  வேங்­க­டம் என்ற சொல்­லுக்கு பொருள் விளக்­கம்,  ராமா என்­ப­வர்  ஹாத்­தி­ராம் பாபா­வாக மாறி­யது எப்­படி, பாலாஜி என்று பெயர் வரக்­கா­ர­ணம்,  திரு­ம­லை­யில் முத­லில் யாரை வணங்­கு­வது என பக்­தர்­கள் மன­தில் எழும்  பல சந்­தேக வினாக்­க­ளுக்கு ஏற்ற  விளக்­கங்­களை இப்­ப­டத்­தில் தெளி­வான படக்­காட்­சி­க­ளாக  அமைத்து தெளிவுபடுத்­தி­யுள்­ளார்­க­ளாம்.

பெரு­மா­ளுக்கு உகந்த  புரட்­டாசி மாதத்­தில் உல­க­மெங்­கும் திரை­யிட இப்­ப­டத்தை  ஜோஷிகா பிலிம்ஸ் சார்­பில் தயா­ரித்­தி­ருக்­கும்  தயா­ரிப்­பா­ளர்­கள்   துரை­மு­ரு­க­னும், நாக­ரா­ஜ­னும்  திட்­ட­மிட்­டுள்­ள­ன­ராம்.