தண்ணி பார்ட்டியில் சல்மானிடம் ஆட்டையைப் போட்ட பெண்கள்

09 அக்டோபர் 2015, 11:00 AM

சில தினங்கள் முன்பு ஒரு பார்ட்டி. தண்ணி ஆறாக ஓடியது. அப்போது 4 இளம் பெண்கள் சல்மான் கானின் ரசிகைகள் என்றபடி வளைய வந்திருக்கிறார்கள். பார்ட்டி உற்சாகத்தில் ரசிகை யார் ரகசிய ஏஜெண்ட் யார் என்று எப்படி பார்க்க முடியும்?
 
பார்ட்டி முடிந்து சமநிலைக்கு திரும்பிய போது, ரசிகைகள் 4 பேரும் எஸ்கேப். அவர்களுடன் சல்மானின் பர்ஸ், கூலிங்கிளாஸ் உள்பட பல காணவில்லை.
 
பார்ட்டிக்கு வந்த ஸ்ரேயா, சுஷ்மிதாவின் பொருள்களையும் அந்தப் பெண்கள் ஆட்டையை போட்டிருக்கிறார்கள்.
 
போலீஸில் புகார் தரலாம் என்ற யோசனையை சல்மான் ஏற்கவில்லை. நியாயம்தான். அவர்கள் ஏதாவது தந்துதானே திருடியிருப்பார்கள்.