இன்டர்போல் ஆபீசர் அஜீத்!

05 மே 2017, 08:47 PM

சிவா இயக்­கத்­தில் அஜீத் நடித்து வரும் படம் 'விவே­கம்'. விவேக் ஓப­ராய், காஜல் அகர்­வால், அக்­க்ஷராஹாசன் உள்­ளிட்ட பலர் நடித்து வரும் இப்­ப­டத்­தின் இறு­தி­ கட்ட படப்­பி­டிப்பு பல்­கே­ரி­யா­வில் மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­கி­றது.

இந்­தாண்டு தனது பிறந்த நாளை படக்­கு­ழு­வி­ன­ரோடு கொண்­டாடி மகிழ்ந்­துள்­ளார் அஜீத். மே 10ம் தேதி­யோடு மொத்த படப்­பி­டிப்­பை­யும் முடிக்க படக்­குழு திட்­ட­மிட்­டுள்­ளது.  ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளி­யிட முடிவு செய்­துள்­ளார்­கள்.

இப்­ப­டத்­தில் பணி­யாற்றி வரு­ப­வர்­க­ளி­டம் பேசிய போது, "அஜீத் அதி­க­மாக தேதி­கள் ஒதுக்­கி­யது 'விவே­கம்' படத்­துக்­கா­கத்­தான் இருக்­கும். கதையை கேட்­ட­வு­டன் பிடித்­து­வி­டவே, அக்­க­தா­பாத்­தி­ரத்­திற்­காக சுமார் 20 கிலோ வரை குறைத்து, உடம்பை மிக­வும் சிலிம்­மாக மாற்­றி­விட்­டார். முக்­கால்­வாசி படப்­பி­டிப்பு வெளி­நாட்­டில்தான் என்­றா­லும், மிக­வும் கடு­மை­யாக இருந்­தது. கடு­மை­யான குளி­ரில் மொத்த குழு­வுமே பணி­பு­ரிந்­துள்­ளோம்.

இன்­டர்­போல் அதி­கா­ரி­யாக அஜீத் நடித்­துள்­ளார். இதன் படப்­பி­டிப்பு ஐரோப்­பா­வின் மிக முக்­கி­ய­மான நாடு­க­ளில் நடை­பெற்­றுள்­ளது. படத்­தில் 6 பாடல்­கள். ஒவ்­வொன்­றாக வெளி­யிட படக்­குழு முடிவு செய்­துள்­ளது" என்று தெரி­வித்­தார்­கள்.