த்ரில்லர் பாணியில் ‘கிரகணம்!’

05 மே 2017, 08:46 PM

பிக் பிரிண்ட் பிச்­சர்ஸ் சார்­பில் ஐபி. கார்த்­தி­கே­யன் மற்­றும் கேஆர். பிலிம்ஸ் சார்­பில் சர­வ­ணன் இணைந்து தயா­ரித்து இருக்­கும் திரைப்­ப­டம் 'கிர­க­ணம்.' அறி­முக இயக்­கு­நர் இளன் இயக்­கி­யுள்­ளார். இவர் அடிப்­ப­டை­யில் ஒரு குறும்­பட இயக்­கு­நர். இவ­ரு­டைய 'வி. சித்­தி­ரம்' குறும்­ப­டம் ரசி­கர்­க­ளி­டத்­தில் பெரும் பாராட்­டு­களை பெற்­றது மட்­டு­மின்றி, லடாக் சர்­வ­தேச திரைப்­பட விழா­வி­ல் திரை­யிடவும் தேர்வு செய்­யப்­பட்­டி­ருந்­தது

இப்­ப­டத்­தில் கிருஷ்ணா, - 'கயல்' சந்­தி­ரன் இரு­வர் நாய­கர்­க­ளாக நடிக்க, புது­முக நாய­கி­யாக நந்­தினி ராய் நடிக்­கி­றார். இவர்­க­ளு­டன்  கரு­ணா­க­ரன், கரு­ணாஸ், ஜெய­பி­ர­காஷ் மற்­றும் பிளாக் பாண்டி ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஒளிப்­ப­தி­வா­ளர் சர­வ­ணன், இசை­ய­மைப்­பா­ளர் சுந்­தி­ர­மூர்த்தி மற்­றும் படத்­தொ­குப்­பா­ளர் மணி கும­ரன் என பல திற­மை­யான தொழில்நுட்ப கலை­ஞர்­களை

'கிர­க­ணம்' திரைப்­ப­டம் உள்­ள­டக்கி இருப்­பது மேலும் சிறப்பு.

''என்­னு­டைய 'வி. - சித்­தி­ரம்' குறும்­ப­டத்­திற்கு  ரசி­கர்­கள் அளித்த  அமோக  வர­வேற்பை தொடர்ந்து நான் உரு­வாக்கி இருக்­கும் முதல் முழுநீள திரைப்­ப­டம் 'கிர­க­ணம்.' இரண்டு வெவ்­வேறு சம்­ப­வங்­கள் மூலம் எப்­படி படத்­தின் கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­குள் தொடர்பு ஏற்­ப­டு­கின்­றது என்­ப­து­தான் படத்­தின் ஒரு வரி கதை.  முழுக்க முழுக்க த்ரில்­லர் பாணி­யில் படத்தை உரு­வாக்கி இருந்­தா­லும், ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்த கூடிய எல்லா சிறப்­பம்­சங்­க­ளை­யும் நாங்­கள் இந்த படத்­தில் உள்­ள­டக்கி இருக்­கின்­றோம். எனக்கு முழு சுதந்­தி­ரத்­தை­யும், ஆத­ர­வை­யும் வழங்­கிய என்­னு­டைய தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு நன்றி'' என்­கி­றார் இயக்­கு­நர் இளன்.