‘திறப்பு விழா!’

05 மே 2017, 08:45 PM

'திறப்பு விழா' என்ற திரைப்­ப­டத்தை இயக்கி வரு­கி­றார் புது­முக இயக்­கு­னர் கே.ஜி. வீர­மணி. இவர் பிர­பல இயக்­கு­னர் ஹரி­யி­டம், 'வேங்கை', 'சிங்­கம்', 'பூஜை' போன்ற படங்­க­ளில் இணை இயக்­கு­ன­ராக பணி­யாற்­றி­யுள்­ளார். 'திறப்பு விழா' படம் பற்றி அவர் கூறி­ய­தா­வது...

''இன்று டாஸ்­மாக்­கிற்கு எதி­ராக மக்­கள் போராடி வரு­வதை மைய­மாக வைத்து இப்­ப­டத்­தின் கதையை உரு­வாக்­கி­யுள்­ளேன். அத்­து­டன் காதல் காட்­சி­களையும் இணைத்து பொழு­து­போக்கு அம்­சங்­க­ளு­டன் திரைக்­க­தையை எழு­தி­யுள்­ளேன்.

இதில் புது­முக நாய­க­னாக ஜெய ஆனந்த், நாய­கி­யாக ரஹானா நடித்­துள்­ளார்­கள். இவர்­க­ளு­டன் மனோ­பாலா, ஜி.எம். குமார், ரோபோ சங்­கர், 'பசங்க' சிவ­கு­மார், கவிதா பாலாஜி, ரெங்­க­நா­யகி.. உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ளார்கள். இப்­ப­டத்தை எம். ஜெரினா பேகம் தயா­ரித்­துள்­ளார்­. படத்­திற்­கான படப்­பி­டிப்பை விரு­தாச்­ச­லம், நெய்­வேலி, கல்­பாக்­கம், சென்னை உள்­ளிட்ட இடங்­க­ளில் பட­மாக்­கி­யுள்­ளோம். படத்­தின் அனைத்து பின்­னணி வேலை­களும் முடிந்து விரை­வில் ரிலீஸ் செய்ய உள்­ளோம்.''