தேனி பின்னணியில் கதை!

05 மே 2017, 08:44 PM

பிர­பல பின்­னணி பாட­க­ரான கே.ஜே. ஜேசு­தா­ஸின் மக­னும், பின்­னணி பாட­க­ரு­மான விஜய் ஜேசுதா­ஸும் நடி­க­ராக மாறி­விட்­டார்.

பல்­வேறு மொழி­க­ளில் இது­வ­ரை­ 500-க்கும் மேற்­பட்ட பாடல்­களை பாடி­யி­ருக்­கும் விஜய் ஜேசுதாஸ் இரண்டு முறை சிறந்த பாட­க­ருக்­கான கேரள அர­சின் விரு­தை­யும், நான்கு முறை சிறந்த பாட­க­ருக்­கான பிலிம்­பேர் விரு­தை­யும் பெற்­ற­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

விஜய் யேசு­தாஸ் ஏற்­க­னவே ‘அவன்’ என்ற மலை­யாள படத்­தி­லும், தனு­ஷு­டன் ‘மாரி’ படத்­தி­லும் நடித்­தி­ருக்­கி­றார். இப்­போது முதன்­மு­றை­யாக ‘படைவீரன்’ என்ற படத்­தில் கதா­நா­ய­க­னாக நடிக்க போகி­றார். இப்­ப­டத்­தில் அம்­ரிதா என்ற புது­மு­கம் கதா­நா­ய­கி­யாக நடிக்­கி­றார்.

கதை­யின் களம் மிக­வும் பிடித்­தி­ருந்­த­தால் இயக்­கு­நர்  பார­தி­ராஜா இப்­ப­டத்­தில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். இவர்­க­ளு­டன் ‘கல்­லூரி’ அகில், கலை­ய­ர­சன், இயக்­கு­நர் விஜய் பாலாஜி, இயக்­கு­நர் மனோஜ் குமார்,  நித்­தீஷ், இயக்­கு­நர் கவிதாபாரதி,  கன்யா பாரதி, ‘தெய்­வம் தந்த வீடு’ நிஷா உள்­ளிட்ட பல­ரும் நடிக்­கின்­ற­னர்.

'கடல்', ‘ஓ காதல் கண்­மணி’ ஆகிய படங்­க­ளில் இயக்­கு­நர் மணி­ரத்­னத்­தி­டம் உத­வி­யா­ள­ராக பணி­பு­ரிந்த தனா, இப்­ப­டத்­தின் மூலம் இயக்­கு­ந­ராக தமிழ் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­கி­றார். தேனி மாவட்­டத்­தில் உயிர்ப்­போடு வாழும் ஒரு கிரா­ம­மும், அதன் மண் சார்ந்த மனி­தர்­க­ளின் வாழ்க்­கை­யு­மாக உரு­வா­கும் படம் ‘படை­வீ­ரன்’. இறு­திக்­கட்ட பணி­க­ளில் நெருங்­கி­யுள்ள ‘படைவீரன்’ படத்­தின் இசை வெளி­யீட்டு விழா சமீ­பத்­தில் நடந்­தது.