சிலைகளை பாராட்டிய சித்திரபாவை!

05 மே 2017, 08:43 PM

மலை­யா­ளத்­தி­லி­ருந்து தமி­ழுக்கு இறக்­கு­ம­தி­யா­கி­யுள்ள இளம் நடிகை கீர்த்தி சுரேஷ். 1980களில் மலை­யாள சினி­மா­வில் முன்­னணி நடி­கை­யாக திகழ்ந்த மேனகா, தமி­ழி­லும் 'நெற்­றிக்­கண்' உள்­ளிட்ட சில படங்­க­ளில் நடித்­துள்­ளார். இவ­ரது மகள்­தான் இந்த கீர்த்தி சுரேஷ். கேரள மாநி­லம், திரு­வ­னந்­த­பு­ரத்­தில், 1992ம் ஆண்டு அக்­டோ­பர் 17ம் தேதி பிறந்­தார் கீர்த்தி சுரேஷ். டில்­லி­யில் பேஷன் டிசை­னிங் முடித்­து­விட்டு அப்­ப­டியே சினி­மா­வுக்கு வந்­து­விட்­டார். ஆரம்­ப­கா­லத்­தில் தனது தந்­தை­யின் தயா­ரிப்­பில் உரு­வான சில படங்­க­ளில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டு 'கீதாஞ்­சலி' எனும் மலை­யாள படத்­தில் ஹீரோ­யி­னாக அறி­மு­க­மா­னார். தொடர்ந்து மலை­யா­ளத்­தில் சில படங்­க­ளில் நடித்­த­வர் அப்­ப­டியே தமி­ழுக்­கும் வந்து விட்­டார். தமி­ழில் இவ­ரது முதல் படம் 'இது என்ன மாயம்.' அதை தொடர்ந்து  'ரஜினி முரு­கன்,' 'பைரவா,' 'பாம்பு சட்டை' போன்ற படங்­க­ளில் நடித்­தார் கீர்த்தி. இது­ த­விர மலை­யா­ளத்­தி­லும், தெலுங்­கி­லும் சில படங்­க­ளில் நடித்து வரு­கி­றார்.

சமீ­பத்­தில் இவர் சென்­னை­யி­லுள்ள விஜிபி ஸ்னோ கிங்­ட­மில் அமைந்­துள்ள  சிலிக்­கான் சிலை அருங்­காட்­சி­ய­கத்தை,  குத்­து­வி­ளக்கு ‘தீட்டி’ துவக்கி வைத்­தார்.

 அப்­போது கீர்த்தி சுரேஷ் பேசு­கை­யில், ''ஓவி­யர் ஸ்ரீதர்  மிகப்­பெ­ரிய திற­மை­சாலி. எந்த ஆர்ட் கேலரிக்கு போனா­லும் அவர் வரைந்த ஓவி­யங்­கள் இல்­லா­மல் இருக்­காது. ஸ்ரீதர்  என்­னி­டம் இந்த சிலிக்­கான் ஐடியா பற்றி சொல்­றப்­பவே ரொம்ப பிடிச்­சி­ருந்­தது. இது மட்­டு­மல்­லா­மல் அவ­ரி­டம் இன்­னும் நிறைய ஐடி­யாஸ் இருக்கு. எல்­லாமே சூப்­பரா இருக்­கும். அடுத்­த­டுத்து உங்­களை ஓவி­யர் ஸ்ரீதர் ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­து­வார். இந்த சிலிக்­கான் சிலை மியூ­சி­யம் ரொம்ப லைவ்­வான அழ­கோட இருக்கு. இதை துவக்கி வைக்க என்னை அழைத்­தது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி'' என்றார்.