கண்பார்வையற்ற டான்ஸராக தன்ஷிகா!

03 மே 2017, 01:13 AM

தமி­ழில் விக்­ரம் – - ஜுவா கூட்­ட­ணி­யில் `டேவிட்' என்ற படத்தை இயக்­கி­ய­வர் பிஜாய் நம்­பி­யார். இயக்­கு­நர் மணி­ரத்­னத்­தி­டம் உதவி இயக்­கு­ந­ராக பணி­யாற்­றிய இவர், இந்­தி­யில் ஒரு சில படங்­களை இயக்­கி­யுள்­ளார். இந்­நி­லை­யில் `சோலோ' என்ற படத்தை தமிழ், மலை­யா­ளம் என இரு மொழி­க­ளில் இயக்கி வரு­கி­றார். இப்­ப­டத்­தில் துல்­கர் சல்­மான், - ஆர்த்தி வெங்­க­டேஷ் முன்­னணி கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடிக்­கின்­ற­னர்.  ஸ்ருதி ஹரி­ஹ­ரன், சாய் தமங்­கர், பிர­காஷ் பேல­வாடி, அன்­சன் பால், அன் அகஸ்­டின், சதீஷ், ஜான் விஜய் உள்­ளிட்ட பல­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடிக்­கின்­ற­னர். மேலும் தமி­ழில் வளர்ந்து வரும் நடி­கை­க­ளுள் ஒரு­வ­ரான சாய் தன்­ஷிகா இப்­ப­டத்­தின் மூலம் மலை­யா­ளத்­தில் அறி­மு­க­மா­கி­றார். தொடர்ந்து வித்­தி­யா­ச­மான கதை­களை தேர்ந்­தெ­டுத்து நடித்து வரும் தன்­ஷிகா `சோலோ' படத்­தி­லும் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்று நடித்து வரு­கி­றார். இப்­ப­டத்­தில் துல்­கர் சல்­மான் ஜோடி­யாக, பார்­வை­யில்­லாத நட­னப் பெண்­ணாக தன்­ஷிகா நடிப்­ப­தாக இயக்­கு­நர் பிஜாய் நம்­பி­யார் தெரி­வித்­துள்­ளார். இப்­ப­டத்­தின் இரண்டு கட்ட படப்­பி­டிப்­பு­கள் முடிந்­துள்ள நிலை­யில், மூன்­றா­வது கட்ட படப்­பி­டிப்­பில் தன்­ஷிகா இணை­கி­றார்.