இயக்குனர் அட்லி தயாரிக்கும் 2 படங்கள்!

03 மே 2017, 01:00 AM

இயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள 'சங்கிலி புங்கிலி கதவத்தொற' படத்தின் பாடல்களை சில தினங்களுக்கு முன் கமல்ஹாசன் வெளியிட்டார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தை கமல்ஹாசனுடன் 'விஸ்வரூபம்' படம் உட்பட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் பேரனுமான ஐக் இயக்கியுள்ளார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, கோவை சரளா, தம்பி ராமையா, ராதிகா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லியின் ‘ஏ பார் ஆப்பிள்’ பட நிறுவனமும், ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ’ நிறுவனமும் இணைந்து தயரித்துள்ளன. இந்த படம் இம்மாதம் 19ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அட்லி மேலும் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கிறார். இதில் ஒரு படத்தை அட்லியின் நண்பரும், எழுத்தாளர் பாலகுமாரனின் மகனுமான சூர்யா பாலகுமாரன் இயக்குகிறார். இன்னொரு படத்தை அட்லியின் உதவியாளர் அசோக் இயக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் ஜூன் மாதத்திற்குள் முடிந்துவிடுமாம். அதனை தொடர்ந்து இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஜூன் மாதம் துவங்கும் என்று  அட்லி தெரிவித்துள்ளார்!அட்லி தற்போது விஜய் நடிப்பில் ‘விஜய் 61’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவிருக்கிறது.