எனக்கு நானே போட்டி! – விஜய் சேதுபதியுடன் நேர்காணல்

06 செப்டம்பர் 2016, 10:38 PM

'தர்­ம­துரை'யின் பாஸிட்­டிவ் ரிசல்ட், அடுத்து 'மெல்­லிசை', 'றெக்க', 'ஆண்­ட­வன் கட்­டளை', கே.வி. ஆனந்த் இயக்­கத்­தில் இன்­னும் பெயர் வைக்­காத படம் என்று பர­ப­ரப்­பு­டன் இருக்­கி­றார் விஜய் சேது­பதி. அவரை சந்­தித்­த­போது…

* பெரிய எதிர்­பார்ப்­பு­க­ளு­டன் வரும் நட்­சத்­திர நடி­கர்­க­ளின் படங்­களே வெற்றி பெற திண­றும்­போது, நீங்­கள் நடித்த படங்­கள் தொடர் வெற்றி பெற்று வரு­கின்­ற­னவே...?

 என்னை பார்க்­கும் எல்­லோ­ரும் ஆச்­ச­ரி­யத்­து­டன் கேட்­கும் கேள்வி இது­தான். இந்த வெற்­றிக்கு நான் மட்­டும் சொந்­தக்­கா­ரன் என்று ஒரு­போ­தும் நினைக்க மாட்­டேன். என்னை திறம்­பட நடிக்க வைக்க முடி­யு­மென்று நம்­பிய இயக்­கு­நர்­கள்­தான் இந்த வெற்­றிக்கு முதல் கார­ண­மா­க­வும், முக்­கிய சூத்­தி­ர­ தா­ரி­யா­க­வும் இருக்­கி­றார்­கள். 'தென்­மேற்­குப் பரு­வ­காற்று' படத்­தி­லேயே நான் பர­வ­லாக கவ­ னிக்­கப்­பட்­டேன். ஆயி­னும் இரண்டு வரு­டங்­கள் எனக்கு படமே இல்லை. 'நடு­வுல கொஞ்­சம் பக்­கத்த காணோம்' படப்­பி­டிப்­பிற்கு அவ்­வப்­போது போய் விட்டு வரு­வேன். ஆரம்­பத்­தில் அந்­தப் படத்­தின் மீது எனக்கு பெரி­தாக நம்­பிக்கை இல்­லா­மல்­தான் நடிக்­கவே ஆரம்­பித்­தேன். ஆனால் போகப் போக ஈடு­பாடு ஏற்­பட்­ட­தை­யும் மறுப்­ப­தற்­கில்லை. வாய்ப்பே இல்­லா­மல் இருந்­த­போது வந்த நிதா­னம்­தான் அடுத்­த­டுத்த பய­ணங்­க­ளுக்­கான திட்­ட­மி­ட­லைத் தந்­தது. ரசி­கர்­கள் எதிர்­பார்ப்­பதை ஒவ்­வொரு படத்­தி­லும் செய்து முடித்து விட்­டால் எந்த ஒரு நடி­க­ரா­லும் வெற்­றி­க­ளைத் தொடர்ந்து கொடுக்க முடி­யும். இது­வரை பெற்ற வெற்­றி­கள் பெரிய விஷ­ய­மல்ல. இதைப் போலவே இனி வரும் படங்­க­ளும் தொடர்ந்து வெற்றி பெற வேண்­டும் என்­ப­தால் இன்­னும் கவ­னத்­து­டன் படங்­க­ளைத் தேர்வு செய்­கி­றேன்.

* 'இறைவி'யில் நடிக்க எப்­படி ஒப்­புக்­கொண்­டீர்­கள்?

ஓர் ஆணாக நாம் அனை­வ­ருமே அதை செய்ய வேண்­டும் என நினைக்­கி­றேன். 'இறைவி' மாதிரி ஒரு படம் பண்­ணு­வது எனக்கு வாழ்க்­கை­யில் கிடைத்த வரம். அப்­ப­டத்­தின் திரைக்­க­தையை அவ்­வ­ளவு எளி­தாக எழு­தி­விட முடி­யாது. கார்த்­திக் சுப்­பு­ராஜை அதற்­காக நான் பாராட்­டு­கி­றேன். ஒரு காட்­சிக்­காக நாங்­கள் நடிக்­க­வில்லை, அப்­ப­டத்­தின் திரைக்­கதை அமைப்­புக்­காக எல்­லாம் நடித்­தோம். நடி­க­னாக என்னை வேறொரு இடத்­துக்கு நகர்த்­தி­யது 'இறைவி'. ஒரு காட்­சி­யில் அஞ்­சலி என்னை மிக­வும் திட்­டு­வார்­கள். அக்­காட்­சி­யில் நான் எப்­படி நடிப்­பது என்று எனக்கு தெரி­ய­வில்லை. நிறைய பேசி பேசி அரை மணி நேரம் கழித்­துத்­தான் அக்­காட்­சியை நிறைவு செய்­தோம். ஒரு இடத்­துக்­குப் போய் இக்­காட்­சியை நாம் எப்­படி பண்­ணப் போகி­றோம் என்று யோசிக்­கும் போது ஒரு நடி­க­னாக எனக்கு நம்­பிக்கை அளித்­தது. அதே மாதி­ரி­யான அனு­ப­வங்­கள் எனக்கு 'ஆண்­ட­வன் கட்­டளை' படத்­தி­லும் ஏற்­பட்­டது.

* 'இறைவி' போதிய வர­வேற்பை பெற­வில்­லையே என்ற வருத்­தம் இருக்­கி­றதா?

இங்கு நிறைய அர­சி­யல் இருக்­கி­றது. அதை தட்­டிக் கேட்க எல்­லாம் முடி­யாது. அது எனக்கு ரொம்ப வலிக்­கி­றது, வேத­னை­யாக இருக்­கி­றது. 'இறைவி' மாதி­ரி­யான ஒரு நல்ல படத்தை யார் தவ­றாக பேசி­னா­லும் தப்­பு­தான். அந்த படத்­தில் பல பேரு­டைய உழைப்பு இருக்­கி­றது. 'இறைவி' ஒரு மைல்­கல் படம். ரசி­கர்­கள் அப்­ப­டத்தை எப்­ப­டிக் கொண்­டா­டி­னார்­கள் என்­பது அனை­வ­ருக்­குமே தெரி­யும்.

சினிமா என்­ப­தற்கு முன்­னால் நாம் எல்­லாம் ஒன்­றுமே இல்லை. நீங்­கள் ஒரு சக மனி­தனை ஏமாற்­ற­லாம், ஆனால் ஓர் ஆன்­மாவை ஏமாற்­றக்­கூ­டாது. 'இறைவி' படத்தை பற்றி பல­ரும் என்­னு­டைய பேஸ்­புக்­கில் வந்து கருத்து தெரி­வித்­தார்­கள். 90% பாராட்­டித் தான் பேசி­னார்­கள். அவர்­கள் பாராட்­டி­யது எல்­லாம் ரொம்ப ஆத்­மார்த்­த­மாக இருந்­தது. அவர்­க­ளு­டைய அனைத்­துப் பாராட்­டு­க­ளுக்­கும் கார்த்­திக் சுப்­பு­ராஜை மட்­டுமே சேரும்.

* வளர்ந்து வரும் நடி­கர்­க­ளில் உங்­க­ளைக் கவர்ந்­த­வர்­கள் யார்­யார்?

 எனக்கு சிவ­கார்த்­தி­கே­யனை மிக­வும் பிடிக்­கும். கார­ணம் அவ­ரு­டைய டைமிங் சென்ஸ். அவ­ரைப் பார்க்­கும் போது இன்­னும் நிறைய கற்­றுக் கொள்ள வேண்­டும் போல் இருக்­கி­றது. சம­கா­லத்­தில் இப்­படி ஒரு திற­மை­யன நபர் இருப்­பது நல்­ல­து­தான். அப்­போ­து­தானே ஆட்­டத்­தில் சுவா­ரஸ்­யம் இருக்­கும்? "அட்­டக்­கத்தி' தினேஷ் நடிப்­பும் எனக்கு பிடித்­தி­ருந்­தது. உண்­மை­யா­கவே அவ­ருக்கு ஆர்­வம் அதி­கம். இவர்­கள் நடித்த படங்­களை சமீ­பத்­தில்­தான் பார்த்­தேன். இன்­னும் நிறைய பேரை­யும் பிடிக்­கும்.

 * அஜீத், விஜய், விக்­ரம், சூர்யா, தனுஷ்.. மாதிரி சிலர்­தான் இருக்­காங்க. சிவ­கார்த்­தி­கே­யன், விஜய் சேது­ப­தின்னு அடுத்த ரேஸுக்கு சில பேர் வந்­துட்­டீங்க.. உங்­கள் இலக்கு என்ன...?

 யாராக இருந்­தா­லும் 'ஹிட்' முத­லி­டம் தரும். ஆனால், திற­மை­தான் நம் காலத்­துக்­குப் பிற­கும் நிற்­கும். ஜெயிக்க வேண்­டும் என்ற வெறியை விட, என் கேரக்­ட­ருக்கு உயிர் கொடுக்க வேண்­டும் என்ற எண்­ணம்­தான் எப்­போ­தும் என் மன­தில் நிற்­கும். இப்­போ­து­தான் சினி­மா­வில் அடி­யெ­டுத்து வைத்­தி­ருக்­கி­றேன். எனக்­கென்று எந்த ஹிஸ்ட்­ரி­யும் இல்லை. கேரக்­டர் ஆர்ட்­டிஸ்ட் கன­வில்­தான் சினி­மா­வுக்கு வந்­தேன். ஹீரோ­வாகி விட்­டேன். இனி என்ன நடக்­கும் என்று பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்க வேண்­டும். போட்­டின்னா எனக்கு நானே­தான். எனக்கு எந்த ரேஸி­லும் சேர பிடிக்­காது. சேர்ந்­த­தும் கிடை­யாது.