சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 260 – எஸ்.கணேஷ்

30 ஆகஸ்ட் 2016, 09:47 PM

வில்­லன் வேடங்­க­ளி­லும், சின்­னச் சின்ன வேடங்­க­ளி­லும் நடித்து வந்த லிவிங்ஸ்­டன், முதல் முறை­யாக கதை­யின் நாய­கன் வேடத்­தில் நடித்த ‘சுந்­தர புரு­ஷன்’ படத்தை சூப்­பர் குட் பிலிம்ஸ் சார்­பில் ஆர்.பி. சவுத்ரி தயா­ரித்­தி­ருந்­தார்.இப்­ப­டத்தை டி. சபா­பதி இயக்­கி­யி­ருந்­தார்.

இதில் லிவிங்ஸ்­டன், வடி­வேலு, வினு சக்­ர­வர்த்தி, சவு­மி­யன், ரம்பா, வடி­வுக்­க­ரசி… உள்­ளிட்ட பலர் நடித்­தி­ருந்­தார்­கள். ஆர்­தர் ஏ. வில்­சன் ஒளிப்­ப­திவு செய்­தி­ருந்­தார்.இசை – சிற்பி. பத்­தி­ரி­கை­யா­ளர் பட்­டூர் செல்­வம் எழு­திய கதைக்கு திரைக்­கதை எழு­தி­யி­ருந்­தார் லிவிங்ஸ்­டன்.

சிறு வய­தி­லி­ருந்தே லிவிங்ஸ்­ட­னுக்கு தன் மாமன் மகள் ரம்­பாவை மிக­வும் பிடிக்­கும். லிவிங்ஸ்­ட­னின் தாயார் திடீ­ரென மர­ண­ம­டை­யவே, தந்தை வேறொரு பெண்­ணைத் திரு­ம­ணம் செய்து கொள்­கி­றார். இத­னால் ஏற்­ப­டும் பிரச்­னை­யால் சிறு வய­தி­லேயே விட்டை விட்டு வெளி­யே­று­கி­றார் லிவிங்ஸ்­டன்.

பன்­னி­ரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இளை­ஞ­னாக கிரா­மத்­துக்­குத் திரும்ப வரு­கி­றார் லிவிங்ஸ்­டன். தன் தந்தை இரண்­டா­வ­தாக திரு­ம­ணம் செய்து கொண்ட சித்தி மக­னான வடி­வே­லு­வைத் தன் தம்­பி­யாக ஏற்­றுக் கொள்­கி­றார்.

அழகு மயி­லாக வளர்ந்து நிற்­கும் ரம்­பா­வைத் திரு­ம­ணம் செய்து கொள்ள விரும்­பு­கி­றார் லிவிங்ஸ்­டன். ஆனால் ரம்­பாவோ வேறொரு இளை­ஞ­னைக் காத­லிக்­கி­றார். ரம்பா காத­லிக்­கும் இளை­ஞ­ருக்கே அவ­ரைத் திரு­ம­ணம் செய்து கொடுக்­கத் திட்­ட­மி­டு­கி­றார் ரம்­பா­வின் தந்தை.

எப்­ப­டி­யா­வது தன் சகோ­த­ரன் லிவிங்ஸ்­டனை ரம்­பா­வு­டன் சேர்த்து வைக்க வேண்­டும் என்று முடி­வெ­டுக்­கும் வடி­வேலு, சில திட்­டங்­கள் தீட்டி ரம்பா மணக்க இருந்த மாப்­பிள்­ளையை சிறைக்கு அனுப்பி விடு­கி­றார். இப்­போது வேறு வழி­யில்­லா­மல் ரம்­பாவை லிவிங்ஸ்­ட­னுக்­குத் திரு­ம­ணம் செய்து வைக்­கி­றார் அவ­ரது அப்பா.

இந்த விஷ­யம் ரம்­பா­வுக்­குத் தெரி­ய­வ­ரும் போது அவர் என்ன முடி­வெ­டுத்­தார்? லிவிங்ஸ்­ட­னு­டன் தன் மண­வாழ்­வைத் தொடர்­கி­றாரா அல்­லது சூழ்ச்சி செய்து தன் காத­லனை சிறைக்கு அனுப்­பி­விட்டு தன்னை மணந்து கொண்ட லிவிங்ஸ்­டனை விட்­டுப் பிரி­கி­றாரா என்­பதை படத்­தின் இறு­தி­ப­குதி விளக்­கு­கி­றது.

‘சுந்­தர புரு­ஷன்’ கதை­யைக் கேட்ட பல தயா­ரிப்­பா­ளர்­க­ளும் ‘லிவிங்ஸ்­டன் படத்தை இயக்­க­லாம். ஆனால் கதை நாய­க­னாக நடிக்­கக்­கூ­டாது’ என்று நிபந்­தனை விதித்­தார்­கள். ஆனால், தயா­ரிப்­பா­ளர் ஆர்.பி.சவுத்ரி மட்­டும் லிவிங்ஸ்­டன் நடிப்­ப­தற்கு சம்­ம­தம் தெரி­வித்து அவரை உற்­சா­கப்­ப­டுத்­தி­ய­தால் அவர் கதை நாய­க­னாக நடித்­தார்.

தமி­ழில் வெற்­றிப் பெற்ற ‘சுந்­தர புரு­ஷன்’ பி.சி.பட்­டீல் நடிக்க ‘சன்­னப்பா சன்­ன­க­வுடா’ என்ற பெய­ரில் கன்­ன­டத்­தி­லும் மறு­வாக்­கம் செய்­யப்­பட்­டது. 2006ம் ஆண்டு சுனில்-­ஆர்த்தி அகர்­வால் நடிக்க ‘அன்­டால ராமுடு’ என்ற பெய­ரில்  பின்பு தெலுங்­கி­லும் வெளி­யா­னது.