சிரஞ்சீவியின் ‘கத்தி' அவதாரம்!

19 டிசம்பர் 2015, 08:46 PM

2007ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசியலில் பிஸியானதால் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார் சிரஞ்சீவி. இதுவரை 149 படங்களில் நடித்திருக்கிறார் சிரஞ்சீவி. அவரது 150வது படம் உருவாக வேண்டும் என ஆசைப்பட்டார் சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரண் தேஜா. இதற்காக கடந்த ஒரு வருடமாக பலதரப்பட்ட கதைகளையும் கேட்டு வருகிறார் ராம் சரண் தேஜா. இந்நிலையில் தமிழில் .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்தகத்திதிரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து, அதில் தனது அப்பா சிரஞ்சீவியை நாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம் ராம் சரண்.

ராம் சரண் தயாரிப்பில் உருவாகவிருக்கும் சிரஞ்சீவின் 150வது படத்தை வி.வி.விநாயக் இயக்கவிருக்கிறார். ஏற்கெனவே ஏ.ஆர்.முருகதாஸின் ‘ரமணா’ படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க ‘தாகூர்’ என்ற பெயரில் இயக்கினார் வி.வி.விநாயக். அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘ஸ்டாலின்’ என்ற நேரடித் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவியின் 150வது படத்தில் பணியாற்றவிருக்கும் டெக்னீஷியன்கள், இதர நடிகர், நடிகைகள் குறித்த முழு விவரம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.