ஐந்து இளம் ஹீரோக்களுடன் அனுஷ்கா!

17 டிசம்பர் 2015, 12:29 AM

'பாகுபலி', 'ருத்ரம்மாதேவி', மற்றும் இஞ்சி இடுப்பழகி' படங்களை அடுத்து அனுஷ்கா தற்போது 'பாகுபலி 2' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா நடிக்கும் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு 'ருத்ராக்ஷா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

'ருத்ராக்ஷா' கதையை கேட்டதும் அனுஷ்கா இம்ப்ரஸ் ஆகிவிட்டதாகவும், இந்த படத்திற்காக அனுஷ்கா தன்னுடைய கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து தந்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஐந்து இளம் கதாநாயகர்களை கிருஷ்ண வம்சி அறிமுகப்படுத்த உள்ளார், ஆனாலும் இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றும் கூறப்படுகிறது.