விஷாலின் பேன் இந்திய படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்...

13 ஜனவரி 2022, 06:02 PM

விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகைசூடும்’, ‘லத்தி’ ஆகிய படங்கள் உருவாகிவருகிறது. இதனை தொடர்ந்து அவரின் 33வது படத்திற்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கூட்டணி அமைக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பேன் இந்திய திரைப்படமாக இந்த படம் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆதிக் இந்த படத்தை கமர்ஷியல் ஃபார்முலாவில் இருந்து விலகி பிரம்மாண்டமாக படமாக்க உள்ளார். வினோத் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் நிறைவடைந்த நிலையில் படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா ஒப்பந்தமாகினார். அவரை தொடர்ந்து படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.