கைதி இந்தி ரீமேக் படப்பிடிப்பு துவங்கியது..! படத்தின் தலைப்பு இதுவா..!

12 ஜனவரி 2022, 06:59 PM

நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தை வேறொரு பாதைக்கு திருப்பிவிட்ட படம் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’. விஜய்யின் ‘பிகில்’ படத்தோடு வெளியான இந்த படம் பிகில் படத்துக்கு இணையாக போட்டியிட்டது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றி கார்த்தியையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜையும் கோலிவுட்டில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. 

ஹீரோயின் இல்லாமல், பாடல்கள் இல்லாமல் வெளியான இந்த படத்தை கார்த்தி ஒற்றையாளாக் சுமந்து சென்றிப்பார், இவரோடு நரேன், தீனா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்தனர். இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. கார்த்தியின் கேரக்டரில் அஜய் தேவ்கன் நடிக்க படத்தை இயக்குகிறார் தர்மேந்திரா ஷர்மா. ‘போலா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் நேற்று துவங்கியுள்ளது. விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.