வெற்றிமாறனை தொடர்ந்து சூரியை ஹீரோவாக்கும் முக்கிய இயக்குநர்...

12 ஜனவரி 2022, 06:57 PM

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த சூரி இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் மூலம் லீட் ஹீரோவாக எண்ட்ரியாக உள்ளார். 

இதற்காக கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து உடலை கச்சிதமாக தயார் செய்துக்கொண்ட சூரிக்கு மற்றொரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குநர் அமீர் இயக்க இருக்கும் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய அமீர் படத்தில் சூரி நடிக்கயிருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரிக்கு அடுத்தடுத்து டான், விருமன், எதற்கும் துணிந்தவன், போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.