ஜூலை மாதம் வெளியாக இருக்கும் தனுஷின் ஹாலிவுட் படம்

08 ஜனவரி 2022, 07:03 PM

கோலிவுட்டில் பிஸியாக இருந்து வரும் தனுஷ் அவ்வப்போது தமிழ் மொழி அல்லாது ஹிந்தி, இங்கிலீஷ் என படங்கள் நடித்து தனது மார்கெட்டை விரிவுப்படுத்துவதில் கவணம் செலுத்தி வருகிறார். இந்த லிஸ்டில் தற்போது சில தெலுங்கு படங்களும் இணைந்துள்ளது. முதலாவதாக ‘வாத்தி’ எனும் படம் உருவாகிவருகிறது. 

இதனையடுத்து சேகர் கமுலா இயக்க இருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படங்கள் தவிர தமிழில் தனுஷுக்கு மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதனுடன் அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்கள் ரூசோ ப்ரதர்ஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தி க்ரே மேன்’ படமும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. தனுஷுடன் க்ரிஸ் ஈவன்ஸ் மற்றும் ரயான் காஸ்லிங் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை வரும் ஜூலை மாதம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளை கவணித்து வருகிறது நெட்ஃபிளிக்ஸ். விரைவில் தி க்ரே மேன் படத்தின் டீஸர் வெளியாகளாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.