. ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

08 ஜனவரி 2022, 07:02 PM

கோலிவுட்டில் அடுத்தடுத்து படங்களை ரிலீஸுக்கு தயார் நிலையில் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் சசிகுமார். இவர் நடிப்பில் கடைசியாக  ‘எம்.ஜி.ஆர். மகன்’ திரைப்படம் வெளியாகியது, இதனையடுத்து கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், நாநா உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

இதில் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாகிருக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்து வருகிறது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஏற்கனவே இராண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியாகத இந்த படம் இந்த முறை பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியாகவுள்ளது. அதன்படி படம் வரும் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது.