சத்தமில்லாமல் முடிந்த நயன்தாரா மலையாள பட ஷூட்டிங்

07 டிசம்பர் 2021, 05:07 PM

‘நெற்றிக்கண்’ படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஒரு படம், மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வந்தது. இதில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்வி ராஜ் ஜோடியாக நடித்துவந்த படத்திற்கு  ‘கோல்ட்’ என தலைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் கேரளாவில் நடந்துவந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக இயக்குநர் அறிவித்துள்ளார். பிரித்விராஜ் தயாரித்து நடிக்கும் இந்த படத்தை மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜ்மல் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். முன்னதாக அல்போன்ஸ், ஃபஹத் ஃபாசிலுடன் பாட்டு படத்தை இயக்குவதாக அறிவித்தார். கேரளாவில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக பாட்டு படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் கோல்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் கோல்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்தொகுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் நேரம் மற்றும் பிரேமம் போன்றது அல்ல. இது இன்னொரு வகை திரைப்படம். சில நல்ல கதாபாத்திரங்கள், சில நல்ல நடிகர்கள், இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மற்றும் சில நகைச்சுவைகளுடன் மூன்றாவது படம். வழக்கம் போல் ஒரு எச்சரிக்கை! போரையும் அன்பையும் எதிர்பார்த்து யாரும் தியேட்டருக்கு  வரக்கூடாது. என முகநூலில் கூறியுள்ளார்.