‘விருமன்’ படத்தில் கார்த்தியுடன் இணைந்த சரோஜா தேவி...

07 டிசம்பர் 2021, 05:06 PM

கோலிவுட் முன்னணி நடிகர் சூர்யா மீண்டும் கார்த்தி நடிப்பில் தயாரித்து வரும் படம் தான் ‘விருமன்’. முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 2022ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘விருமன்’ படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படம் கிராமத்து கதையம்சத்தில் தயாராகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே மதுரை, தேனி பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில தினங்களுக்கு முன் தேனி மாவட்டம் பகுதிகளில் படப்பிடிப்பின் நடுவே நடிகர் கார்த்தி யை ரசிகர்கள் சந்தித்தனர்.  அந்த புகைப்படம் வைரலானது.  ஹீரோ வீடு போல செட் அமைத்து பெரிய பந்தி காட்சியும் படமாக எடுக்கப்பட்டது. இந்நிலையில் விருமன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி பழம்பெரும் நடிகை சரோஜா தேவியுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகை சரோஜா தேவி ஏற்கனவே நடிகர் சூர்யாவுடன் ஆதவன் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். தற்போது விருமன் படத்திலும் சூர்யாவின் தயாரிப்பில் நடிப்பது முக்கியத்துவம் பெறுகிறது.