சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் சூப்பர் ஸ்டார்..! இயக்குநர் இவரா..?

24 நவம்பர் 2021, 11:20 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கும் திரைப்படம் தான் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிருந்த இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். 

இந்த படத்தை தொடர்ந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ஒரு படம் நடிக்க இருப்பதாக செய்திகள் உலாவ துவங்கியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாண்டிராஜ் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகளில் கவணம் செலுத்தி வருகிறார். இதனிடையே ரஜினிக்காக இவர் ஒரு கதையை தயார் செய்து அதை ரஜினியிடமும் கலாநிதி மாறனிடமும் கூறியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகளாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.