அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறதா செல்வராகவனின் ‘சாணி காயிதம்

24 நவம்பர் 2021, 11:15 PM

தமிழ் சினிமாவில் காலங்கள் கடந்தும் பேசும்படியான படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரின் 7ஜி ரெயின்போகாலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் இன்றளவும் பேசப்படுகின்ற. இதற்கிடையே செல்வராகவன் இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ‘சாணி காயிதம்’ எனும் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படத்தில் செல்வராகவனுடன் சேர்ந்து கீர்த்தி சுரேஷ் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதில் இருவருக்கும் திருடர்கள் வேடம் என பரவலாக பேசப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு  வேலைகள் முடிவடைந்து தற்போது ரிலீஸுக்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்துக்கு முதலில் இசையமைப்பாளராக ஒப்பதமாகிருந்த யுவன் ஷங்கர் ராஜா கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து விலக சாம் சி.எஸ் இந்த படத்திற்கு புதிய இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது படத்தின் இசைப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் 2022ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.