பாலா இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கும் சூர்யா

22 நவம்பர் 2021, 10:20 PM

கோலிவுட்டில் தனித்துவமான படங்களை இயக்கி தங்களுக்கான முத்திரையை அழுத்தமாக பதித்திருக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் பாலா. இவரின் இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அடுத்ததாக இவர் இயக்கும் படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் அதர்வா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதர்வாவிற்கு பதிலாக சூர்யாவையே அந்த கேரக்டரில் நடிக்க வைக்க பாலா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது, எனது இந்த படத்தில் சூர்யாவிற்கு இரட்டை வேடங்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். இது தவிர பழம்பெரும் பாலிவுட் நடிகை ஹேம மாலினி இந்த படத்தில் இணைவதாக பரவலாக பேசப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. குறுகிய கால படமாக உருவாகும் இதை சீக்கிரமே முடித்து ஓடிடியில் ரிலிஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.