‘குருதி ஆட்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு.

22 நவம்பர் 2021, 10:20 PM

கோலிவுட்டில் தனக்கான இடத்தையும் தனக்கான ரசிகர் கூட்டத்தையும் திரட்ட கடுமையாக உழைத்து வரும் வாரிசு நடிகர் அதர்வா. இவரின் நடிப்பில் வெளியான பாணா காத்தாடி, பரதேசி, ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது இவர் கைவசம் ‘தள்ளி போகாதே’, ‘குருதி ஆட்டம்’, ‘ஒத்தைக்கு ஒத்த’, ‘அட்ரஸ்’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. குருதி ஆட்டம் படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகிட்ட நிலையில் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், குருதி ஆட்டம் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியது, அதனை தொடர்ந்து படத்தை வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.