ரிலீஸுக்கான சென்சார் அனுமதி வாங்கிய சிம்புவின் ‘மாநாடு’ படக்குழு

22 நவம்பர் 2021, 10:19 PM

வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகிருக்கும் படம் ‘மாநாடு’. சிம்பு முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கருணாகரன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திள்ளனர். யுவன ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 படத்தின் டீஸர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்து படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தீபாவளியில் இருந்து தள்ளி நவம்பர் 25க்கு மாற்றி அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது. அதில் கலந்துக் கொண்ட படக்குழுவினர் ‘மாநாடு’ திரைப்படம் உருவானது குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நிறைய நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகிருந்தது. இந்தநிலையில் படத்தை பார்த்த சென்சார் குழு படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கி ரிலீஸுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.