ஆவின் ஸ்வீட் எடு தீபாவளி கொண்டாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

26 அக்டோபர் 2021, 02:17 PM

சென்னை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்புகளை ஆவின் மூலம்தான் வாங்க வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அளித்த பேட்டி விவரம்

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வாங்குவதில் கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றன. அரைகிலோ இனிப்பு ரூ 262 ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு வாங்கப்பட்டது

இப்போது அரைகிலோ இனிப்பு 80 ரூபாய் குறைவாக 230 ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

ஆனால் அரசுத்துறை நிறுவனத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு ஆவின் நிறுவனத்தில் அரை கிலோ 230 ரூபாய்க்கு வாங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் ஊழலும் இல்லை ஊதாரித்தனமும் இல்லை. இது அண்ணாமலைக்கு தெரியவில்லை என்றார்

மேலும் அவர் கூறுகையில்

முன்பு அரசு பேருந்துகளில் 70 லட்சம் பேர் தான் பயணம் செய்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 1 கோடியே 70 லட்சமாக உயர்ந்திருக்கிறது

மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருப்பதால் அதிகளவில் பெண்கள் பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள். இதனால் ஏற்படும் செலவுக்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 1500 கோடி மானியம் வழங்பியிருக்கிறார் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன்