‘ஜாங்கோ’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது...

25 அக்டோபர் 2021, 01:16 PM

சிறிய பட்ஜெட் படங்களில் தரமான படங்களை கொடுத்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் மீது மக்களிடையே நம்பிக்கையை பெற்றிருப்பவர் தான் சீ.வி.குமார். தமிழ் சினிமாவிற்கு நிறைய புது முக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ள இவர் தயாரிப்பில் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார் சதீஷ். அவருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடித்திருக்கும் இத படத்தை இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ‘ஜாங்கோ’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காதல், காமெடி நிறைந்த அறிவியல் சம்மந்தப்பட்ட படமாக உருவாகியுள்ளது. இதில் கருணாகரன், ரமேஷ் திலக், ஹரீஷ் பெரடி, அனிதா சம்பத், டேனியல் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளானர். கடந்த 2018ல் துவங்கிய இந்த படத்தின் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிளாக ‘அனலே அனலே’ எனும் பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முதல் டைம் லூப் திரைப்படமான இதன் ட்ரைலரும் முற்றிலும் மாறுபட்ட பாணியில் உருவாகிருப்பது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படத்தை வருகிற நவம்பர் 19ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.