நவம்பர் மாதம் திரைக்கு வரும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்

23 அக்டோபர் 2021, 05:43 PM

இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா ரவி இணைந்து நடித்திருக்கும் படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில், படத்தின் ரிலீஸின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. ஊர்வசி, மனோபாலா, யோகி பாபு, முனிஷ்காந்த், மயில்சாமி, பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் போஸ்டரில் 100 சதவீதம் நாட்டி, 100 சதவீதம் டேஸ்டி என்ற டேக் லைன் கொடுத்திருந்தனர், அதை வைத்து பார்க்கும் போது படம் ஆங்காங்கே அடல்ட் காமெடிகள் நிறைந்த படமாக உருவாகிருக்கும் எனும் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. லிப்ரா ப்ரோடக்‌ஷன் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் தியேட்டர் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின ஆனால், படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தீர்மானமாக இருந்து படத்தை வரும் நவம்பர் 19ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.