டைட்டில் சர்ச்சையில் சிக்கிய விஷாலின் புதிய படம்

23 அக்டோபர் 2021, 05:42 PM

கோலிவுட்டின் ஆக்‌ஷன் ஹீரோ விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் கணிசமான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்த படங்கள் தவிர அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். ஏற்கனவே விஷால், த்ரிஷா நடிப்பில் வெளியாகிய சமர் படத்தில் சுனைனா ஒரு முக்கிய கேரக்டரில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்த படத்திற்கு ‘லத்தி சார்ஜ்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர், ஆனால், இந்த தலைப்பை ஏற்கனவே ஒரு தயாரிப்பாளர் முன்பதிவு செய்து படத்தையும் எடுத்து முடித்துவிட்டாராம். இப்போது விஷால் படத்தின் அறிவிப்பை பார்த்துவிட்டு போர்க்கொடி தூக்க ஆரம்பித்து விட்டார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும். தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படக்குழு குழம்பியுள்ளனர்.