‘இரவின் நிழல்’ படத்தின் வேலைகளை துவங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

23 அக்டோபர் 2021, 05:40 PM

வித்யாசமான கதைக்களத்தில் படம் இயக்கி கோலிவுட் ரசிகர்களை கொண்டாக வைக்கும் நடிகர் மற்றும் இயக்குநர் தான் பார்த்திபன். இவரின் படைப்பாக கடைசியாக வெளியாகிருந்தது ‘ஒத்த செருப்பு’. பார்த்திபன் இயக்கி, தயாரித்து, அவர் மட்டுமே நடித்திருந்த அந்த படம் கோலிவுட் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்திருந்தது. மேலும் ஏராளமான விருதுகளையும் இந்த படம் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அவரின் அடுத்த புது முயற்சியாக உருவாகி வரும் படம் தான் ‘இரவின் நிழல்’. இந்த படத்தை ஒரே ஷாட்டாக எடுத்து முடித்துள்ளார். உலகளவில் இது போன்ற முயற்சியில் சில படங்கள் வெளியாகிருந்தாலும் தமிழுக்கு இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு படத்திற்காக காத்திருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கு மூன்று பாட்டு, பட ப்ரோமோஷனுக்காக ஒரு பாட்டு என மொத்தம் நான்கு பாட்டுகள் ரஹ்மான் இசையில் இந்த படத்திற்காக உருவாகிறது.  இந்தநிலையில் படத்தின் பின்னணி இசை பணிகள் துவங்கியுள்ளதாக பார்த்திபன் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். அவரின் பதில் “இரவின் நிழல்-இன்று இசை புயல் ARR பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார் தான்.”இது single shot முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்-பாராட்டி keyboard-ல் விரல் ஓட்டினார்-வைரல் ஆகப் போகும் இசை பிரள்யத்திற்காக”. என குறிப்பிட்டுள்ளார்.