இந்த தீபாவளிக்கு தியேட்டரில் மட்டுமல்ல வீட்டிலும் செம எண்டெர்டயின்மெண்ட் இருக்கு

23 அக்டோபர் 2021, 05:39 PM


இந்த தீபாவளி விடுமுறை தினத்தை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரின் ‘அண்ணாத்த’, விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்திருக்கு ‘எனிமி’, அருண் விஜய்யின் ‘வா டீல்’ ஆகிய படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளது. இது தவிர ஓடிடி தளத்தில் சூர்யாவின் ‘ஜெய் பீம்’, சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர். மகன்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இப்படி புது படங்கள் வரிசைக்கட்டி நிற்க தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டிப்போட்டு புதிய படங்களை ஒளிப்பரப்ப உள்ளன. சன் டிவி சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகிருக்கும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தையும், கலைஞர் டிவி ஆர்யா நடிப்பில் அமெசானில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘சார்பட்டா பரம்பரை’ படத்தையும், ஜீ தமிழ் தொலைக்காட்சி சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தையும் ஒளிப்பரப்ப இருப்பதாக அறிவித்துள்ளது. ஒரு விடுமுறை தினத்தை இப்படி எல்லா தளத்திலும் குதுகலமாக்கினால் மக்களுக்கு செம எண்டெர்டயின்மெண்ட் தான். இந்த தீபாவளியை நீங்கள் எந்த படத்தோடு கொண்டாட விரும்பினாலும் அதோடு மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.