சைன்ஸ் பிக்‌ஷன் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கவிருக்கும் ஆர்யா...

22 அக்டோபர் 2021, 04:49 PM

மகாமுனி, டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3 என வரிசையாக கவணமீர்த்துவந்த  தனது அடுத்தடுத்த படங்கள் மீதும் தீவிரம் காட்டி வருகிறார். இவருக்கு அடுத்த ரிலீஸாக வரும் தீபாவளி அன்று ‘எனிமி’ வெளியாகவுள்ளது. இதில் ஆர்யாவுடன் நடிகர் விஷாலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

இந்நிலையில் ஆர்யாஅடுத்து நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி என வித்தியாசமான படங்களை இயக்கிய இயக்குனர் சக்தி சௌந்திரராஜன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா தயாரித்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஹாலிவுட் பட பாணியில் சயின்ஸ் பிக்சன் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. வரும் அக்டோபர் 25 திங்கள் கிழமையில் இருந்து படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.