‘பிரேக்கிங் நியூஸ்’ படத்திற்காக பிரம்மாண்டமாக உருவாகும் சண்டைக்காட்சி

22 அக்டோபர் 2021, 04:49 PM

ரோபோடிக்ஸ் டெக்னாலஜி மற்றும் அனிமேஷனை மையமாக வைத்து ஜெய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் தான் ‘பிரேக்கிங் நியூஸ்’. இப்படத்தில் கதாநாயகியாக பானுஸ்ரீ நடிக்க சினேகன், பழ.கருப்பையா, தயாரிப்பாளர் அழகிய தமிழ்மணி, தேவ்கில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 நிறைய கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகிவரும் இந்த படத்தில் ஜெய் ரோபோட்ஸ்களுடன் சண்டைபோடும் காட்சிகள் எடுக்கப்பட்டு விஷுவல் எபெக்ட்ஸ் வேலைகள் நடந்துக்கொண்டு இருப்பதாக படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது, விரைவில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.